Advertisement

பாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல்

திருவனந்தபுரம்: பலாத்கார பாதிரியார் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, குருவிலாங்காடு சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற தவறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், குருவிலாங்காடு சர்ச் நிர்வாக கட்டடத்தில் தங்கியுள்ளனர்.

வெளியேற உத்தரவு:

இந்நிலையில், செங்கணச்சேரியில் இருந்து செயல்படும், இந்திய கத்தோலிக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்ச் கட்டடத்தில் தங்கி கொண்டு, சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறினால், கூட்டமைப்பு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அங்கிருந்து வெளியேறக்கோரி போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (57)

 • arun veli - chennai,இந்தியா

  பாதர் , பாதர் னு சொல்லிட்டு அந்த பெயரை காப்பாத்துவதற்கு ஏதும் குடுக்கவிட்டால் , அவர் என்ன செய்வார் பாவம்..? அதான் அவரே தேடிக்கிட்டார்... அதுவும் தப்புன்னா என்னய்யா பண்றது....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அதானே சேவை செய்ய மறுத்தால் , சவ்கரியங்களை துறக்கவேண்டியது அவசியம்

 • Asvin Raj - Periyakulam,இந்தியா

  சர்ச்சில் எல்லா தீய செயல்களும் நடக்கிறது . அதனால் தான் கோயில்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் . குடித்து விட்டு கும்மாளம் அடித்தல் , பாலியல் விளையாட்டுகள் , சீட்டாட்டம் ,மற்றும் ஒழுக்கக்கேடான அணைத்து செயல்களும் நடக்கிறது . பணம் இங்க முக்கியமாக விளையாடுகின்ற்து . அன்பு ,கருணை ,இரக்கம் ,ஏழை, எளியர்களுக்கு உதவி புரிதல் ,எளிமையாக வாழ்வது ,இறைப்பற்று , ஏசுவின் போதனைகளை கற்பித்தல் போன்ற நல்ல செயல்கள் இங்கு பெரும்பாலான சர்ச்சுகளில் நடைபெறுவதில்லை . கிருஸ்த்துவ மக்களும் காணிக்கை என்ற பெயரில் பாதிரியாருக்கு பணத்தை கொடுத்து அவர்களின் ஏமாற்று வேலைகளில் மயங்கி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு விட்டுவிடுகின்றனர் .கோவிலுக்கு செல்வதை விட உங்கள் உள்ளத்தில் இறைவனை நினைத்து செபம் செய்ங்கள். பசித்தோர்க்கு உணவளியுங்கள் ,ஏழை ,எளியவர்களுக்கு உதவுங்கள்,நல்லஒழுக்கங்களை முடிந்தவரை பின் பற்றுங்கள் பாதிரியார் ,சிஸ்டர் கலை நோக்கி போகாதீர்கள் , ஏனெனில் ஏசு பாதிரியர்களை பற்றி அக்காலத்தில் கூறிஉள்ளார் . பார்வைக்கோ நீண்ட அங்கியை போர்த்தியிருப்பார்கள் ஆனால் நல்லதை ஏதையும் அவர்கள் செய்யமாட்டார்கள் .மக்கள் மேல் அவற்றினை சுமத்துவார்கள் ஆனால் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார் . எனவே இவர்களை போன்றவர்களை நாம் புறம் தள்ளினால் இப்படி பட்டோர் யாரும் இனிமேல் உருவாக மாட்டர்கள் .உண்மை என்றுமே கசக்கும் .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாதர்களுக்கு 'சேவை' செய்யத்தான் கன்னியாஸ்திரிகள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. கயவர்களை கழுவேற்ற வேண்டும்...

 • கோகுல்,மதுரை -

  பெண்கள் சக்தியின் வடிவம். மகாலெட்சுமியின் அம்சம். அவங்களையே துரத்துவிங்களா? கர்ம பலனை விரைவில் அனுபவிப்பீங்க...

Advertisement