Advertisement

சபரிமலை போராட்டம்: பெருகுகிறது ஆதரவு

சபரிமலை : சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பா.ஜ., கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி புறப்பட்டது. சபரிமலையில் பெண்களுக்கான தனி வசதி எதுவும் செய்யப்படவில்லை என தேவசம் போர்டும் அறிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பா.ஜ., கூட்டணி சார்பில் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தலைமையில் நேற்று பந்தளத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அக்.15-ம் தேதி இந்த பேரணி கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைகிறது. அங்கு சபரிமலையை காக்க கோரி போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

பந்தளத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் சுதாகரன், சபரிமலையில் பெண் போலீசை நியமிக்க கேரள அரசு முயற்சிக்கிறது, பக்தர்கள் நினைத்தால் ஒரு போலீஸ் கூட சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்படும், சபரிமலையை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது, பெண்களுக்கு சம உரிமை என்று கூறி இந்த தீர்ப்பை பினராயி அரசு கேட்டு பெற்றது, என் கூறினார்.

இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், சபரிமலையில் பெண்களுக்காக எந்த சிறப்பு வசதியும் செய்யப்போவதில்லை. பெண் போலீஸ் நியமிப்பது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை, என்றார்.

தமிழகத்திலும் ஆதரவு :நேற்று மதுரையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடந்தது. தேனியில் ஐயப்பா சேவா சமாஜம் மாநில பொறுப்பாளர் கணேசன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. தேவதானப்பட்டியில் அகிலபாரத ஐயப்பசேவா சங்க தலைவர் முத்துக்காமாட்சி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. திண்டுக்கல்லில் 'சபரியை காப்போம்' என வலியுறுத்தி ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஊர்வலம் நடந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • J.Isaac - bangalore,இந்தியா

  48 நாள் சாமி . மலை இறங்கி பம்பையில் குளித்த பிறகு ஆசாமி ஆகி விடுகிறார்கள் . வாழ்வில் மாற்றம் வரவில்லை என்றால் எத்தனை ஆண்டுகள் போனாலும் பிரயோஜனம் இல்லை . வாழ்வில் மாற்றம் இருந்தால் டாஸ்மாக் , லஞ்சம் , ஊழல் குறைந்திருக்கும் எல்லாம் மாய்மால வாழ்க்கையாகி விட்டது

 • J.Isaac - bangalore,இந்தியா

  சும்மா இருந்த சங்க உச்ச மன்ற நீதிபதி அவர்கள் ஓய்வு பெறும்போது ஊதிவிட்டு விட்டார் . கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் திட்டமிட்டபடி பிஜேபி பயன்படுத்திக்கொள்ளும் . சபரிமலையில் மட்டும் தானே பெண்கள் போகக்கூடாது . மற்ற ஊர்களில் ஆண்களும் பெண்களும் செல்லுகிறார்கள் . மத விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது ஆபத்தானது . அரசியல் ஆதாயத்துக்காக ஆரம்பித்துவிட்டது பிஜேபி தான். மதங்கள் ஒருவனுடைய வாழ்வில் தீய பழக்கங்களிருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும் . மனிதநேயத்தை நற்பண்புகளை மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புகளை பொறுமையை வளர்க்க வேண்டும்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதை ஏற்றுக்கொண்டால் நாளை விபூதி வைப்பது தடை , குங்குமம் வைப்பது தடை , மஞ்சள் பூசுவது தடை , பூ வைப்பது தடை செய்யப்படும்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  நீதியரசர்களுக்கு,நன்றி இந்துக்களை ஒற்றுமைக்கு வழிகாட்டியதற்கு.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  ஐயப்பன் கோவில் நடைமுறை தெரிந்து மதிக்கும் பெண்கள் 10 முதல் 50 வயது வரை போகப்போவது இல்லை. நடைமுறை தெரியாதவர்களிடம் பக்தி இருக்கப்போவது இல்லை. நல்லதோ கெட்டதோ கோர்ட் தீர்ப்பை மதிப்பது நல்லது.

Advertisement