Advertisement

ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு; திமுக நிபந்தனைக்கு காங்., சம்மதம்?

வடமாநிலங்களில் ஏற்பட்டு வரும் அரசியல் சூழ்நிலையால், தமிழகத்தில் அமையவுள்ள அரசியல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேரத்தில், காங்கிரஸ் மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கத் துவங்கியுள்ளது.

தி.மு.க.,வுடனான காங்கிரசின் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனாலும், இதுகுறித்த திரைமறைவு பேச்சு, இறுதிக்கட்டத்தில் உள்ளது. 'இம்முறை நாங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிடப் போவதால், ஒற்றை இலக்கத்தில் தான் உங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும்' என, தி.மு.க., தரப்பு, தெளிவாக கூறிவிட்டது.

இதனால் தான், தி.மு.க.,வுக்கு மாற்றாக, சில யோசனைகளை, தமிழக காங்கிரஸ் தலைமை முன்வைத்தது. இருப்பினும், இதை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் புறக்கணித்து விட்டனர். தி.மு.க., தலைமையின் மிக முக்கிய உறவினர், சமீபத்தில் டில்லியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அகமது படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நடந்த பேச்சில், சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

'டில்லி அரியணைக்கான போட்டியில், நாங்கள் இல்லை. தி.மு.க.,வின் வெற்றி, காங்கிரசுக்கு தானே பயன்படப்போகிறது. எனவே, தொகுதிகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டாம். வெற்றி தான் முக்கியம்' என, தி.மு.க., தரப்பில் சுட்டிகாட்டப்பட்டது. தமிழகத்தில், தொகுதி எண்ணிக்கையை காட்டிலும், கூட்டணி யாரோடு என்பது தான் முக்கியம் என, சோனியா மட்டுமல்லாது, அகமது படேல், குலாம்நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களும் உறுதியாக இருந்தனர்.

இந்த நேரத்தில், பரிசோதனை முயற்சிகள் வேண்டாம். ஓட்டு வங்கி, உள்கட்டமைப்பு என எல்லா வகையிலும், ஏற்கனவே நிரூபணம் ஆன கட்சி, தி.மு.க., தான். மேலும், 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணியை ஏற்படுத்துவோம் என கூறினாலும், சமீபத்திய பல நிகழ்வுகள், அதற்கு நேர் எதிராக உள்ளன.


தேசியவாத, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி ஆகிய கட்சிகள், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைக்க மறுத்து விட்டன. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், தி.மு.க.,வையும் இழந்தால், தேசிய அளவில், காங்கிரசின் மீதான இமேஜ், இன்னும் மோசமாகும்.

எனவே, இழுபறியை மேலும் நீட்டிக்காமல், தி.மு.க., தரும் தொகுதிகளை பெற்று, இதே கூட்டணியில் போட்டியிடலாம்; மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது. விரைவில், அதற்கான அடுத்த கட்ட நகர்வுகளை காணலாம். இவ்வாறு அந்த வட்டராங்கள், தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (64)

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  காங்கிரஸின் நிலை இவ்வளவு பரிதாப நிலைக்கு சென்றதற்கு கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்களே காரணம். அவர்களுக்கென்று தனித்தனி கோஷ்டிகள், எப்போது கூடினாலும் சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, வேஷ்ட்டி கிழிப்பு, போலீஸ் வழக்கு, ரசாபாசமான நிகழ்வுகள். ஏன் இந்த கேவலமான நிலை. மேலிட தலைவர்கள் என்ன செய்தால் கொள்ளையடிக்கலாம் , இத்தாலிக்கு சாதகமாக எப்படி நடக்கலாம், எந்த நாட்டில் கொண்டு சென்று முதலீடு செய்யலாம், என்றுதான் யோசிக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் என காந்தி சொன்னார், ஆனால் யாரும் அதை கேட்கவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சியை அதன் தற்போதய தலைவர்கள் அழித்துவிடுவார்கள்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  shameless beggars

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  Rajiv Gandhi கொலை வழக்கில் திமுகவின் பங்கு என்னன்னு ஜெயின் கமிஷன் அறிக்கை கொடுத்தது .இந்த அப்பாவி பிள்ளை Rahul இப்போ ஸ்டாலின் சொன்னதை எல்லாமே கேட்பாரா?

 • nanbaenda - chennai,இந்தியா

  பாவம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஒற்றை இலக்கமா அல்லது ஒரே சீட் டா?எதுக்கும் சரி,ஏனென்றால் நாங்க கர்நாடகாவில் செஞ்சதை பார்த்தீங்கல்லே? குமாரு காலிலே majority வச்சுக்கிட்டு விழுந்தோமில்லே? எங்களுக்கு ஒரு கண்ணு ,ஒரு கை(எங்க சின்னமே அதுதானே?) ஒரு காலு போனாலும் பரவ நஹி,பிஜேபி க்கு தோல்வி வேணும்,செய்வீர்களா ஸ்டாலின்?

Advertisement