Advertisement

உணர்வின் தவிப்பே கவிதை : எழுத்தாளர் தர்ஷிணி மாயா

Share
''வாசிப்பு பழக்கம் அருமையான பசி, அழகான ருசி. இதை ஒருமுறை சுவைக்க பழகினால் தொடரும். அறிவு ஒன்றே அச்சத்தை முறியடிக்கும் அரிய மருந்து. அறிவு வளர்ந்தால் அனைத்து பயமும் விலகும். படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தினால் மட்டுமே அறிவு மேம்படும். தமிழரின் பாரம்பரியம் அறிய கவிதை, கட்டுரை, சிறுகதை எழுத இளம் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும்,'' என்கிறார் பெண் எழுத்தாளர் தர்ஷிணி மாயா,44.அவர் கூறியது:

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருவம் என் சொந்த ஊர். எம்.பில்., முடித்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியையாக உள்ளேன். எனது இயற்பெயர் ஜெயக்குமாரி. சிறுகதை எழுதும் ஆர்வம் தோன்றிய பின் பெயரை மாற்றினேன். பள்ளி பருவத்திலேயே சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்றேன். 50 சிறுகதை, 20 கவிதை, 8 நாவல்கள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். என் சுடர்விழிக்கையில்' சிறுகதை பெண்களிடம் பாராட்டை பெற்றது.படிக்கும் பழக்கம் அதிகரித்தால் மட்டுமே சிறுகதை, கவிதை எழுதும் ஆர்வம் வரும். தமிழின் பாரம்பரியம், கலாச்சாரத்தை காக்க இளம் தலைமுறையினர் சிறுகதை, கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டவேண்டும். மொழியை இழந்தால் இனமும் அழியும். எழுத்தாளர்கள் கல்கி, சாண்டீல்யன், சுஜாதா, அனுராதா ரமணனை ரோல்மாடலாக' வைத்தே எழுதுகிறேன். தமிழ் கதை செம்மல்' உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது.

இப்போது எல்லாம் இளம் தலைமுறையினர் அலைபேசியில் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள் கவிதை, நாவல், சிறுகதைகளை படிக்க வேண்டும். தமிழே நம்மை சுயமாக சிந்திக்க வைக்கும். அத்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவது தான் என் நோக்கம். மாணவர்களிடத்தில் கவிதை, சிறுகதை எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறேன் என்றார்.இவரது கவிதை வரிகளை சுவாசிக்க 94424 44859.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement