Advertisement

மனோகர் பரீக்கரை மாற்ற முடிவா? கோவா வந்தது மத்திய குழு

பானாஜி: கோவா முதல்வரை மாற்ற பா..ஜ.மேலிடம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளனர்.


கோவா முதல்வர் மனோகர் பரீக்கர்,62 கடந்த . மார்ச்சில், கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று, சிகிச்சை பெற்று ஜூனில் நாடு திரும்பினார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பரீக்கர் சிகிச்சை முடிந்து 6 -ம் தேதி நாடு திரும்பினார். நேற்று மனோகர் பரீக்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இந்நிலையில் பரீக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார் என்பதால் பரீக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும் இது தொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளதாகவும், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • kulandhaiKannan -

  It is high time that he resigns

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உடலில் சுகவீன சுமை இருக்கும் பொழுது பணிச்சுமை தேவை இல்லை...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மனோகர் பாரிக்கரை முதல்வராக்க ஒப்புக்கொண்டதால் தான் மாற்றுக்கட்சிகள் பாஜக அரசின் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டன( காசு கைமாறியது என்று சில லூசுகள் சொன்னதுண்டு) வேறு யாரையும் ஏற்க மாட்டோம் என்றனர் அரை மனதுடன் தான் அமித்ஷா அவரை கோவாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். முன்பே பாரிக்கர் முதல்வர் வேட்பாளராக நின்றிருந்தால் பாஜாகாவுக்கு நிச்சயம் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . இப்போது சிறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் . பாரிக்கர் அம்பயராக இருந்து சமாளிக்க வேண்டியிருக்கும் கோவாவுக்கு சோதனைக் காலம்தான்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எத்தனை கை மாறினாலும் காங்கிரஸிலிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியே கோவாவில் நடக்கிறது. சத்தியம் தர்மம் தழைக்க வேண்டுமானால் பாஜக இது போன்ற அபகரிப்புகளை நிறுத்தி நேர்மையான வழியில் தங்கள் தலைவர்களுக்கு பதவிகளை பெற்றுத் தரட்டும். டெல்லி பல்கலைக்கழகத்தில் கள்ளத்தனமாக EVM மூலம் பெற்ற வெற்றி பற்றிய செய்தியால் நாற்றமெடுத்த அக்கட்சியின் நிலைப்பாடு நடுவீதிக்கு வந்து விட்டது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மனோகர் வேஸ்ட் ......

 • கோமாளி - erode,இந்தியா

  ராணுவ அமைச்சரா இருந்த பாரிக்கருக்கு வெளிநாட்டு உளவு அமைப்பு விஷம் குடுத்துட்டதா கேள்வி

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  யோக்கியமான நல்ல மனிதர்களுக்கு என்றுமே ஆண்டவன் பெரிய அளவில் சோதனை வைக்கிறான்... வென்று வர பரிக்கருக்காக பிரார்த்திக்கிறேன்..

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  BJP can reward Mr.Parrikar with a Governor post and keep him in good rest and health. Congress can also catch the opportunity to get intothe power, playing the same game BJP did earlier, in Goa.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நல்லவர் யோக்கியமானவர் அடுத்துவருபவர் இவரைப்போல் இருப்பாரா

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கடவுளிடம் வேண்டுவோம்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  நல்ல ஆரோக்கியமான முடிவு. பாரிக்கர் மேல் அக்கறை இருந்தால் இதை உடனே செய்யலாம். இதில் அரசியல் வெங்காயம் எதுவும் பார்க்க தேவையில்லை. பாரிக்கர் தனது மிச்ச வாழ்நாளை நிம்மதியாக குடும்பத்துடன் கழிப்பதே சாலச்சிறந்தது.. அதை செய்யட்டும். வேண்டுமானால் முதல்வருக்கான அனைத்து வசதிகளையும் தொடருங்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement