Advertisement

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை

சென்னை: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


வழக்குசேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

அறிக்கைஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் குறித்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

ஒத்திவைப்புஅப்போது மத்திய அரசு வழக்கறிஞர், அறிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. எட்டு வழிச்சாலையில் மாற்றம் செய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதனால், முடிவெடுக்கும் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி 2 வார காலம் நிறுத்தி வைப்பதாக கூறினார்.


இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • christ - chennai,இந்தியா

  சாலை வசதியே இல்லாத பல மலை கிராமங்கள் ,அதில்வசிக்கும் மக்கள் பல வருடங்களாக பல கிலோமீட்டர் நடந்தே இன்றும் கடைகளுக்கும் ,பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர் .அது போன்ற இடங்களுக்கு சாலை வசதி செய்வதற்கு துப்பை காணும். சேலம் சென்னை பல சாலைகள் இருந்தும் யாரோ ஒரு தனிப்பட்ட நபர் பயன்பெற பசுமையை அழித்து பசுமை வழி சாலை அமைக்க முற்படுகின்றனர்

 • tamil - coonoor,இந்தியா

  இதைத்தான் அனைவருமே சொல்லி வந்தார்கள் அவர்கள் அனைவருமே நக்ஸல்களாகவும் , தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் விமர்சிக்கப்பட்டார்கள் அப்படியானால் இந்த தீர்ப்பை கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கமுடியுமா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேன் கூட்டை களைத்தாகிவிட்டது ...இனி வருவதை எதிர்கொள்ளவேண்டியதுதான்

 • sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ

  ஆய்யோ என்னோட சம்பந்திக்கு நான் என்ன பதில் சொல்லப்போறேன் தெரியலியே

 • siriyaar - avinashi,இந்தியா

  Dmk has enough money, so they will pay enough to judges they will write in judgement as like they want same like merina issue. If want proper judgement government should pay more than dmk pays to judges or expose judges and arrest them with anticorruption police.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  The High Court Judges can go fast in any traffic using their siren cars only to give adjournments in the court and then hear just one or two cases and then retire to home. But common citizen has to struggle in the sea of traffic. In a democracy all are considered to be equal but some ( polticians, judges, bureacrats) are more than equal. Long live democracy

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  இன்றைய பத்திரிகை செய்தி.-மேம்பாலம் கட்டுவதற்காக வழிபாட்டு தலம் மாற்றம். லக்னோவில். அதாவது யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உபியில். 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஒரு பிரச்சனையை அம்மாநில அமைச்சர் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் தங்களது மாநில நன்மையைக் கருதி. ஆனால் தமிழகத்தில் இந்த திராவிட விஷமிகள் எல்லா விதமான தடைகளையும் செய்து தாங்கள் இருக்கும் வரை தமிழகத்திற்கு எந்த நன்மையும் வரக்கூடாது என்ற தீய எண்ணத்தில் ஏதாவது காரணம் சொல்லி தடை போடுகிறார்கள். இவர்களின் எண்ணம் தாங்கள் எப்படியாவது பதவியை பிடிக்க வேண்டும். மீண்டும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டது. பாவம் என்ன செய்ய. யோகியை பார்த்தாவது திருந்த வேண்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஆளும் கட்சி களுக்கு ஆணவம் நிறைந்த பிடிவாதம் ஏன்? ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருக்கிறது. அப்புறம் ஏன் 8 வழிச்சாலை? சென்னை - சேலம் பயண நேரத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே குறையும். ஆனால் இந்த சாலையில் கார்களுக்கு 40 ரூபாய்/ வேன்களுக்கு ரூ.60/ பஸ்கள்/ லாரிகளுக்கு ரூ.75 டோல் வசூலிக்கப் போகிறார்களே. - இப்படி ஒருபகல் கொள்ளைக்கான திட்டம் வளர்ச்சி திட்டமா? வாசகர்கள் சிந்தனை க்காக.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  ஒங்க தடை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நிக்காதையா

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  ஆஹா...அபாரம்... தேவை அற்ற இந்த சாலையை பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் கனிம வளம் நிறைந்த எட்டு மலைகளை அழித்து அதன் மேல் உண்டாக்க நினைத்து, மக்கள் விரோத கும்பல் வெறித்தனமாக மக்கள் மீது அதிகாரத்தை ஏவியதை நீதிமன்றம் தடுத்து தற்காலிக மகிழ்ச்சியை மக்களுக்கு அளித்துள்ளது. இந்த சாலை போடப்படும் விளை நிலங்கள் எப்போது வேளாண்மை நடக்கும் நிலங்கள் மட்டுமல்லாது என்றைக்கும் நீர்வளம் குறையா பகுதிகளில் உள்ளவை. ஏற்கனவே இரு நெடுஞ்சாலைகள் அதிக வாகன நெரிசல் இன்றி இருக்கும்போது, வெறும் முப்பது நிமிடங்கள் அல்லது ஒருமணி பயண நேரத்தை குறைக்க வேண்டி, இந்த பத்தாயிரம் கோடி செலவு செய்து இடப்படும் சாலை, தேவை அற்ற ஒன்று என்று விவசாயம் மற்றும் இயற்கையின் அருமை உணர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பண வெறி பிடித்த கும்பல், கார்ப்பரேட்டுகள் அள்ளித்தரும் கமிஷனுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த சாலையை வலுக்கட்டாயமாக போட எண்ணி, இப்படி அடாவடித்தனமாக நடக்கின்றனர். இந்த சாலை அமைப்பது தொடர்பாக தெளிவான, திருத்தமான திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பதை நீதிமன்றம் உணர்ந்து தற்போதைக்கு தடை விதித்துள்ளது வரவேற்க தக்கது. இன்னும் கொஞ்ச நாளில் எடுபுடி அரசும் கவிழும், மேலே ஊர் சுற்றும் ஏழை தாயின் மகனின் அதிகாரமும் முடிவுக்கு வரும். அதுவரை இந்த வழக்கு சென்றாலே மக்களுக்கு வெற்றிதான்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சாலை அமைக்கப் போகும் பகுதியில் வெகு சில பகுதிகளிலேயே முழுமையான விவசாயம் நடக்கிறது . மற்றவை மானாவாரி மற்றும் தரிசு நிலங்கள் . எதிர்ப்பு மற்றும் தடையின் பின்னணியில் பழைய சேலம் சென்னை சாலைகளில் வணிகம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் திமுகவினரும் அவர்களது முன்னாள் உறுப்பினர் ...பதியும்தான்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அரசே நிலமெடுப்பதை தற்காலிகமாக நிறுத்தியதைத் தெரிவித்தபின் கோர்ட்டும் தடை விதிக்கிறது . நீதியின் லட்சணம் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஏன் ஆளும் கட்சி க்கு இப்படி பிடிவாதம்?? இந்த 8வழிச் சாலைகளுக்கு எத்தனை டன்கள் கருங்கல், சரளைக் கல், செம்மண், தார்,அதை உருக்க விறகு என்று சில வாரங்களுக்கு முன் லிஸ்ட் பதிவிட விழைந்தேன். பதிவாகவில்லை. மேலே சொன்னவை தான் பெரிய சுற்று சூழல் பாதிப்பு. நிலம் கையகப்படுத்துவதை விட கொடுமை இதுதான்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இதுவரை வந்த சாலை திட்டத்தை விட இதட்கு தான் அதிக எதிர்ப்பு இருக்கும் போல

 • Krishna -

  நல்லது. நியாயமான போராட்டம் வெற்றி பெற வேண்டும். இருக்கும் dhindivanam சாலையை அகல படுத்தினால் அழிவது வெறும் concrete porutkele. 8 vazhi சாலை அழிப்பது இயற்கையை.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  அப்போ நிரந்தரமா தடை செய்யலை இதுக்கு இவ்வளவு பில்டப்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இரவிலா அல்லது பகலிலா?

 • Murugan - Trichy,இந்தியா

  மோதி சொல்றது தான் நடக்கும்ன்னு சொல்ற தேச துரோகிகள் என்ன சொல்றானுங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

 • bhaski karan - tirupur,இந்தியா

  நன்றி

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  நீதி மன்றங்கள் அநீதி மன்றங்களாகி, நீதிபதிகள் பணத்திற்கும் பொருளுக்கும் அடிமையாகி, இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் செல்ல விடாமல் தடுத்து, தாங்களே மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து பொது சொத்துக்களை சுரண்டி வாழ எடுக்கும் முயற்சி தான் இது போன்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பதும் தடுப்பதும் .. கடவுள் தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்

 • பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா

  வெட்டிப்பயலுக எது செய்யனும்?அதுக்கு என்ன வேணும்?அதனால் உள்ள நன்மை தீமைகள் கூட ஆராய்ந்து செய்ய இயலாத கையாலாகாத அரசுகள்.நாட்டு மக்களை அடகுவைத்து நாட்டை முன்னேற்றுவதாக நினைத்து நாட்டையே அழித்து கொண்டிருக்கும் அறிவாளிகள்.

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  கடைசியா உச்ச நீதிமன்றம் 8 வழி சாலைக்கு அனுமதி கொடுக்க போகுது... மத்திய அரசும் இந்த திட்டத்தை நிறைவேற்றத்தான் போகுது..அதுக்குள்ள தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எந்த கட்சி 8 வழி சாலையை எதிர்த்து ஓட்டு வாங்குச்சு... அவங்க ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம் இது நீதி மன்ற உத்தரவுன்னு சொல்லி அந்த திட்டத்தி நிறைவேற்ற அந்தர் பல்டி அடிப்பாங்க பாரு....அப்போ இந்த திட்டத்தை எதிர்த்தவனுங்க மூஞ்சிய பாக்கணுமே? நெனச்ச சிரிப்பு சிரிப்பா வருது..ஐயோ முடியல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement