Advertisement

வரதட்சணை புகாரில் உடனடி கைது: சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.


வரதட்சணை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அமர்வு, வரதட்சணை கொடுமை தொடர்பாக யாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என தீர்ப்பு வழங்கியிருந்தது.


இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. மேலும், புகார் தொடர்பாக உடனடியாக கைது செய்யலாம். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முன்ஜாமின் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம் எனக்கூறியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  நீதிபதியின் மனைவி நீதிபதி மேல் இப்படிப்பட்ட ஒரு புகாரை அளித்தால் என்ன செய்வது?

 • Sivak - Chennai,இந்தியா

  வரதட்சணை புகாரில் உடனடியா கைது செய்யலாம் ... ஆனா அங்க கற்பழிப்பு புகாரை குடுத்துட்டு பாதிரியை கைது செய் அப்படினு கதறிக்கிட்டு இருக்கு ஒரு கன்னியாஸ்திரி .... டேய் என்னங்கடா உங்க சட்டம் ..

 • venkatan - Puducherry,இந்தியா

  நவீன காலத் தில் கூட பெண் வேலையில் இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் மருமகள் தன் இடமே உள்ள வஸ்து, தன்னிடமே இருக்கவேண்டும், விழா விருந்துகள் பண்டிகைக்கு பெண்ணின் பெற்றோரிடம் அனுப்பக்கூடாது என்ற posesiveness வந்து விடுகிறது. பணம் பெண் போகம் என்று மட்டும் மனிதன் அலைகிறான். மற்ற நற்குண நற்செயல்கள் முதியோரை பக்கத்தில் வைத்துக் கொள்வது மற்ற அற செயல்கள் என்றெல்லாம் தவிர்த்து விடுகின்றனர். பெண்ணிக்கு இன்னும் நிறைய empowerment வேண்டியதிருக்கிறது. இன்னும் அடிமைத்தனம் போகவில்லை என்றே தோன்றுகிறது.

 • ஆப்பு -

  இப்பிடித்தான் எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏடாகூடமா தீர்ப்பு சொல்லிட்டு ஒதுங்கிருவாங்க... என்ன செய்வது நம்ம உளுத்து போன சடங்கள் தப்பு செஞ்சவங்களை தண்டிக்காது... மா மேதைகள் வகுத்தது.

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்பெல்லாம் வரவேற்றோம், இப்போது மாறுபட்ட தீர்ப்புகளை கொடுப்பதால் அதன் மீதுள்ள மதிப்பு நிச்சயம் குறைந்துவிடும், மத்திய அரசின் சட்டப்பிரிவு இந்த மாறுபட்ட தீர்ப்புகளை கொடுக்கும் நிலைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து, உச்சநீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றமாக மாறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும்

 • Suppan - Mumbai,இந்தியா

  எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்தது. பையனும் பெண்ணும் வெளிநாட்டில். பெண்ணின் பெற்றோரும் வெளிநாட்டில். "வரதட்சிணை மற்றும் மாமியார் கொடுமை " புகாரில் இந்தியாவில் வசிக்கும் பையனின் பெற்றோர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டு திங்கள் அன்று விடுவிக்கப் பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். வழக்கும் பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டது. இவர்களுக்கு நடந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எனா உச்சா நீதிமன்றமே S.C./S.T. புகாரில் ஆய்ந்து அறிந்து கைது செய்ய வேண்டும் என்று சொன்னது வரதட்சணை கொடுமை உடனே கைது ஏன்????? அதிலேயுவும் ஏதேனும் Sub class இருக்கா???? நாத்தனாரை கைது செய்ய க்கூடாது, மாமியார் 70 வயது தாண்டியிருந்தால் கைது செய்யக்கூடாது, இன்னும் இப்படி பலப்பல??இல்லை ஒரு கல்யாணமான பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு என் கணவன் வரதட்சணை கொடுமை செய்கின்றான் என்று புகார் சொல்லி கைது செய்ய வைக்கப்பட்டு கள்ளக்காதலில் குஷியாக இருந்தால்??? இதுக்கும் ஒரு sub class கொண்டு வரவேண்டியது தானே??? கோமாளி உச்ச நீதிமன்றமே செய்வது திருந்தச்செய்??? கோகோயின் ஆட்சி ஆரம்பம் ஆயிருச்சா????

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சமீபத்தில்தான் SC வன்கொடுமை புகாருக்காக யாரையும் நியாயமாக விசாரிக்காமலேயே கைதுசெய்யக்கூடாது   என ஒரு தீர்ப்பு வந்தது. இப்போது தலைகீழ். இனி பிள்ளைகள் தாமே திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம்  போகவேண்டியதுதான். வயதான பெற்றோரோ  ஏன் பொல்லாப்பு என தனியாகவே இருந்துவிடுவார்கள். அது சிறைக்குப்போவதைவிட தேவலாம்.

 • S.prakash - Palakkarai,இந்தியா

  பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அருமையான தீர்ப்பு. தயவு செய்து இதில் மற்றம் வேண்டாம். இனி எந்த பெண்ணும் தைரியமாக மணமேடை ஏறலாம் . வரதட்சணை என்கிற பெயரில் இந்திய பெண்கள் வாழ்க்கை சீரழிவிலிருந்து உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பின்மூலம் பாதுகாப்பு அளித்துள்ளது. விசாரணை அதிகாரி நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம் .

 • Katisan Kinal - chennai,இந்தியா

  புகார் உண்மையா பொய்யா ? விசாரிக்காமல் வீட்டில் அனைவரும் கைது . இந்துவாக வாழ்பவர்களுக்கு இந்த நாட்டின் சட்டம் கொடுக்கும் தண்டனை , முஸ்லிம்களை போல் ஜமாஅத் வழி அல்லது Family கோர்ட் தீர்வே சிறந்தது ,

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதை சொல்லித்தான் பல பெண்கள் கணவர்களை மிரட்டி கொண்டிருக்கிறார்கள். ஆகவே முகாந்திரம் இல்லாமல் ஒரு தனி நபரை கைது செய்வது அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானது. ஆகவே இது தடை செய்யப்படவேண்டும்.

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  புகார் பொய்யாக இருந்தால் ?? கைது செய்யப்பட்டவரின் சமூக அந்தஸ்திற்கும் வேலைக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை யார் சரிக்கட்டுவதாம்

 • Ramesh - Bangalore,இந்தியா

  Again Injustice is done by Supreme Court Judges as usual ...I am wondering if these judges view are going on changing according to the time and other courts will take this one as latest....In such cases I am just wondering question of INJUSTICE is not taken into account..So indian judicial tem can be played upon by Lawyers and Judges inturn normal people won't get JUSTICE with this tem ...Judiciary is to go for long OVERHAULING as many laws won't sui to our society and were just copied in initial stages....

 • GMM - KA,இந்தியா

  Marry with in a close relative family. You can not access the legal expenses.

 • Sivak - Chennai,இந்தியா

  ஏற்கனவே பெண்களின் ஆட்டம் கொலை, கள்ள காதல், திருட்டு முதலியவற்றில் முன்னனணியில் இருக்கிறார்கள் ... இதுல அந்த மூஞ்சிகளுக்கு பாதுகாப்பு வேற ... இந்த அபிராமி கொலை செய்த கதையெல்லாம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? பெற்ற குழந்தைகளையே கள்ள காதலுக்காக கொலை செய்தவள் ஒரு வரதட்சணை புகார் கொடுக்கறது என்ன பெரிய விஷயம் ...

 • Meenu - Chennai,இந்தியா

  முன்னுக்கும் பின்னும் மாத்தி மாத்திகிட்டே இருங்காங்க சட்டத்தை.... நம் நாட்டில் தான் இந்த விசித்திர மனிதர்கள் இருக்கிறார்கள்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  One more Injustice is done to the innocent husbands and the wives can put their husbands behind the bar if they don't become their slaves.The married women side also got chances of torturing and harrasing their sons-in-law by this court order.Totally the married men are become scape goats and they will remain as dump, deaf and slaves to their wives till their death.

 • sahayadhas - chennai,இந்தியா

  பொய்யா, மெய்யான புகாரா என்றும் விசாரிக்காமல் கைதா . மகிழ்ச்சி அப்படியே அரசியல் திருடர்களையும் உடனடி கைது செய்யும் சட்டம் இயற்றலாமே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அந்த நீதிபதிகளுக்கு தெரியாதது இந்த நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கிறது..

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  அப்போ ஒரு பெண் நினைத்தால் எந்த நேரமும் தன் கணவனை உள்ளே தள்ளலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement