Advertisement

பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

புதுடில்லி: விஞ்ஞான ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விடுதலைஇஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக 1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும் சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார். கேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.


மேல்முறையீடுஇந்நிலையில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தன்னை சிக்கிவைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், நம்பி நாராயணனுக்கு 50 லடச ரூபாய் இப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (41)

 • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

  '' தங்களது செயல்பாடுகளை கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் தண்டனை வழங்கவும் அதிகாரம் உள்ள நீதித்துறை - நீதிமன்றம் என்ற அமைப்பு ஒன்று உள்ளது '' என்று தெரிந்தே குற்றங்கள் செய்து, அப்பாவிகளை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அரசியல்வாதிகள் மிக்க நாடு நம்நாடு.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  நம்பி நாராயணன் என்பதற்குப் பதிலாக அப்துல்லாவோ..... கிறிஸ்டோபர் என்றோ பெயர் வைத்திருந்தால் கைதே செய்திருக்கமாட்டார்கள்.... ரகசியங்களை விற்றிருந்தாலும் கூட.....

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அமெரிக்க கைக்கூலி காங்கிரஸ் செய்த வேலை இது. ஒரு தனி மனிதன் இவர் மட்டும் பாதிக்கப்படவில்லை, நமது ஜீ எஸ் எல் வீ திட்டமே பத்து வருடம் வரை இதனால் தள்ளி போனது. வெளிநாட்டு கட்சி காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராக இது போல் செய்யாமல் இருந்து இருந்தால் நிச்சயம் இந்நேரம் நிலவுக்கு இந்தியனை அனுப்பியே இருப்போம்.

 • பாரதன். - ,

  இன்று பிஜேபி ஆட்சியில் பேச்சுரிமை இல்லை, எழுத்துரிமை இல்லை, அறிஞர்களை சிறையில் அடைக்கும் அரசு என ஓலமிடும் போலி மதச்சார்பற்ற தன்னார்வத் தொண்டர்களே இப்போது சொல்லுங்கள்... இது உங்கள் ஆட்சியில் நடந்த அராஜகம் தானே. மனசாட்சியிருந்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  நாராயணன் என்றதும் காங்கிரஸ்காரர்களுக்கு தீவிரவாதியாக தெரிந்திருக்கும் போல.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  அருமையான தீர்ப்பு

 • rajan. - kerala,இந்தியா

  நாசாவில் இருந்து ISROவை நிர்மாணிக்க. விக்கிரம் சாராபாய் இந்தியாவுக்கு கொண்டு வந்த 7 இந்திய விஞ்ஞானிகளில் ஒருவர் நம்பி நாராயணன். க்ரோயோனிக் இன்ஜின் தொழில் நுட்ப வல்லுனர் இவர். இவர் சார்ந்த இந்தியாவின் விண்வெளி இலக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாது. காங்கிஸ் ஆட்சி நிர்வாக சீர்கேட்டில் இதுவும் ஒன்று. இந்த இழப்பீடு மிக குறைவு. நம்பி அவர்களுக்கு வாழ்த்துகள்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எல்லாம் இந்த கம்ம்யூனிஸ்டுகள் பேயாட்டம் அங்கு நடந்ததினால் வந்தது. அவர் 2001 ல் ரிடையர் ஆகி விட்டார். 17 வருடம் கழித்து அதாவது அவருக்கு இப்போது 77 வயது இருக்கும், இப்போவாவது தீர்ப்பு வந்ததே என்பர் சந்தோஷம். ரூ 50 லட்சம் இழப்பீடு கொடுக்க ச்சொல்லி உத்தரவு. அதை கொடுக்காமல் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை என்று இழுத்துக்கொண்டு போகும், நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்று சொல்லாமல்???அதற்கு இந்த கோர்ட் என்ன செய்யும்???

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அவர் நேரடியாகவே அப்போதைய காங்கிரஸ் அரசால் பெரிதும் சித்திரவதைக்கு ஆளானேன் என்று கூறி உள்ளார்....அந்த கட்சிக்கு சொம்படிக்கறவங்களுக்கு இந்த செய்தி எல்லாம் தெரியாது....ராவுலுக்கு இப்படி ஒரு விஷயமே தெரியாத மாதிரி இருந்திடுவாப்புல... ....

 • vbs manian - hyderabad,இந்தியா

  cryogenics ராக்கெட் நுட்பம் தெரிந்த இந்த விஞ்ஞானியை பாடாய் படுத்தியிருகிறார்கள்.போலீஸ் அராஜகம் இந்தியாவில் அரசியல் வாதிகளை தவிர யார் மீது வேண்டுமானாலும் பயணம்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  வெட்கம் இல்லாத கேரள அரசு... கான் கிராஸ்... வெளிநாட்டு ஓசி பணத்துக்கு வாழ்க்கை வாழ்பவர்கள்... கேரள மக்கள் வாழ தெரியாது.. பணம் ஒன்றே குறி...அதனால் தான் இயற்கை பொறுமை இழந்து பொங்கி விட்டது..

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நம்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆக விழைபவர்கள் மிக குறைவு அந்த நிலையில் அரசு அமைப்பே ஒரு அறிவியலாளரை பொய் வழக்கில் சிக்கவைத்து தண்டிப்பது என்ன ஒரு கொடுமை தன காலத்திலேயே தான் நிரபராதி என நிரூபித்து வென்ற நம்பி நாராயணனின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் பரிட்சை தோல்வி போன்ற ஆசிரியர் திட்டினார் போன்ற ஒன்றுமில்லாத விஷயத்திற்கு தற்கொலை புரியும் சமூகம் இதிலிருந்து பாடம் கற்று வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து தன்னம்பிக்கையை வளர்த்து பணியாற்றி முன்னேற வேண்டும்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை தடுக்கவே காங்கிரஸ் அரசு இந்த செயலை செய்தது.நாட்டை முன்னேறவிடாமல் பார்த்துக்கொண்ட அரும்பெரும் செயலை காங்கிரஸ் சுதந்திரம் கிடைத்தவுடனேயே ஆரம்பித்து விட்டது.

 • S.prakash - Palakkarai,இந்தியா

  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது.

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  திரு நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு ஆறுதலாக இந்த நஷ்ட ஈடு இருந்தாலும், அவர் இழந்த வாழ்க்கை இனி திரும்பவும் அவருக்கு கிடைக்கப் போவதில்லை. அவ்வாறே , அவரது அறிவியல் நுட்ப அறிவு இல்லாமல், இஸ்ரோ அடைந்த சாதனை இழப்பும் ஈடு செய்யப்பட முடியாதது.

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் , நாம் மிகவும் மதிக்கிற பல இஸ்ரோ தலைவர்களின், மற்றும் இஸ்ரோவின் பலம் பொருந்தி இருந்த விஞ்ஞானிகளின் , பங்கும் உள்ளது என்பது நெருடலான உண்மை.

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  ரூபாய் நூறு கோடி இழப்பீடு தரவேண்டும்.? பொய் வழக்கு போட்டவர்கள் சிறையில் தள்ளவேண்டும் 25 சிறைவாசம் , நீதித்துறை நீதி வழங்குமா ?

 • ஆப்பு -

  சி.பி.ஐ ஒரு யூனிபாரம் போடாத துல்லா போலுஸ். அவிங்க எதையும் உருப்படியா விசாரிக்க மாட்டாங்க....

 • ருத்ரா -

  சொல் புத்தி சுய புத்தி இல்லாத இவர்களால் அந்த விஞ்ஞானியின் வேதனை வடுக்கள் கேரள அரசுக்கு BLACK mark..

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  நாட்டின் முக்கியமான ஆராய்ச்சியில் இருந்த விஞ்ஞானியை போலியாகக் குற்றம் சாட்டி 24 வருடங்களாக கேவலப் படுத்தியாயிற்று. இதற்குப்பின் இருந்த சர்வதேச சதித்திட்டம் மறைக்கபட்டுவிட்டது. நம்பி நாராயண் பாவம்பா விட்ருங்க, கொஞ்சம் காசு கொடுத்துருங்க, சிரமம்ப்பட்டிருக்காரு" ...போய் எல்லாரும் புள்ள் குட்டிய படிக்க வைங்க கோர்ட் சொல்லிவிட்டது. பொய் FIR போட்டு அலைக்கழித்த மதவாத கேரள போலீஸ் பக்கம் பக்கமாகப் பொய் எழுதிய பத்திரிகைப்கள் நாட்டுக்கு அவமானம் என்றாலும் பொருட்படுத்தாது இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நீதியை தெரிந்தோ தெரியாமலோ தாமதப் படுத்திய நீதித்துறை ஆட்கள் இவர்கள் அத்தனை பேரையும் நம்பி நாராயணன் மன்னித்து விட்டேன் என்று சொன்னால் அவர் கடவுள். இந்தக் கொடூரத்தை மன்னிக்க மனிதர்களால் முடியாது.

 • sivan - Palani,இந்தியா

  அர்த்தமில்லாத இழப்பீடு யார் இந்த அவதூறை செய்ய சொன்னது? காங்கிரசுக்கு இதனால் என்ன ஆதாயம்?? கம்யூனிஸ்டுகளுக்கு என்ன ஆதாயம்? ஆதாயம் இல்லாமல் இருவரும் ஆற்றுக்கு செல்ல மாட்டார்கள் வாசக நம்பர் சொன்னது போல ஒரு உண்மையான விஞ்ஞானியை புறம் தள்ளி அவமானப் படுத்தி .. அவரது பங்களிப்பை ஒதுக்கி இருக்கிறோம். அது நாட்டுக்கு நஷ்டம்தானே?? அதற்கு யார் பொறுப்பு?? மத்திய அரசும் உச்ச நீதி மன்றமும் பதில் சொல்லட்டும்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இவர் மீது குற்றம் சாட்டியவர்களே உளவாளிகள். இப்படியான அறிவு மேதைகளால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. யாரும் அரசியல்வாதியாகலாம். ஆனால், அறிவு மேதைகளாக ஜொலிக்க முடியாது.

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  50 லட்சம் மிகவும் கம்மி. இவர் போன்று அறிவாளிகளுக்கு இன்னும் அதிகம் கொடுக்கப்பட வேண்டும்.

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  அந்த விஞ்ஞானியின் கவுரவம் பாதிக்கப்பட்டு, சிறைவாசம், சித்திரவதை இவையனைத்தும் எப்படி நடந்ததோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இவர்மீது பழிபோட்டவர்களுக்கு நடக்குமா?

 • பாலா -

  மிக்க சந்தோஷம். ஆனால் நாம் இழந்த இவரின் ஆராய்ச்சி பங்களிப்பு? அதே போல் இந்த பொய் வழக்கின் பின்னணி? பல விடை தெரியாத தேச விரோத செயல்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கேரளா காங்கிரஸ்தான் இவரைத்துன்புறுத்தியதில் முன்னின்றது. கம்யூனிஸ்ட் ஒத்து ஊதியது. இழப்பீடு மிகவும் குறைவு. இரு கட்சிகளின் தலைவர்களையும் உள்ளேபோட்டு நொங்கெடுக்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement