Advertisement

பத்திரிகையாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சான் சூச்சி

ரோஹிஞ்சா:மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஆங் சான் சூச்சி ஆதரித்துள்ளார்.


இந்த இரு பத்திரிக்கையாளர்களுக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடும் கண்டனங்களைபெற்றது.ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலை தொடர்பான போலீஸ் ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தபோது, யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், "தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய ரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.சர்வதேச அளவில் பலரும் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து நேற்று ஆங் சான் சூச்சி தனது மெளனத்தை கலைத்துள்ளார்.


சட்டத்தை இந்த தீர்ப்பு நிலைநிறுத்தியதாக தெரிவித்த அவர், விமர்சகர்கள் இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் படிக்கவில்லை, என்றும் கூறினார்.இவ்விரு பத்திரிக்கையாளர்களுக்கும் ''இந்த
தீர்ப்பு குறித்து முறையீடு செய்யவும், ஏன் இந்த தீர்ப்பு தவறு என்று வாதிடுவதற்கு உரிமையும் உண்டு'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement