Advertisement

ஐ.எஸ்.ஐ., தான் உலகின் சிறந்த உளவுத்துறை: சொல்கிறார் இம்ரான்

கராச்சி:ஐ.எஸ்.ஐ., உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று, ஐ.எஸ்.ஐ., தலைமை செயலகத்தை முதன் முதலாக பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.


பாகிஸ்தானின் இன்டர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ்' என்ற ஐ.எஸ்.ஐ., தலைமையகத்திற்கு இம்ரான் தனது அமைச்சர்களுடன் சென்றனர். அவர்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர்.“பாகிஸ்தான் பிரதமர் ஐ.எஸ்.ஐ., தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டினார்., பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாடுகளில் ஐ.எஸ்.ஐ.,-யின் செயல்களை பாராட்டினார்.

ஐ.எஸ்.ஐ., தான் நம் நாட்டின் முதல்வரிசை பாதுகாப்பு, உலகிலேயே தலைசிறந்த உளவு ஸ்தாபனம் என்று இம்ரான் பாராட்டினார்” என்று ஐ.எஸ்.ஐ., அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கையாள் என்று பலரும் அவரை விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.


எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முக்கிய காரணமே ஐஎஸ்ஐ தான் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில் உலகில் தலை சிறந்த உளவு ஸ்தாபனம் என்று இம்ரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkatan - Puducherry,இந்தியா

    இந்தியா கூட அடிக்கடி கோல்டு வார் பண்றதுக்குதம்பி உன்னை பற்றியே தம்பட்டம் அடிச்சிகிட்ட எப்படி?இல்லை நல்ல ஐஸ் வைக்கிறிய. உலக நாடுகள் அல்லாம் லே அப்பா புகழனும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement