Advertisement

ஐந்து பேர் சுட்டுக்கொலை

லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவில், மனைவி உட்பட ஐந்து பேரை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தார்.


அமெரிக்காவின், மத்திய கலிபோர்னியாவில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், நேற்று, ஒரு நபர்
துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தான். இதன்பின், அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குள் திடீரென புகுந்து, அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றான்.இதையடுத்து, தன் மனைவியையும் சுட்டுக் கொன்றான். மேலும், இந்த சம்பவங்களைப் பார்த்த மற்றொரு நபரையும் விரட்டியடித்து
சுட்டுக் கொன்றான்.


சிறிது நேரத்துக்குப் பின், வீடு ஒன்றில் புகுந்த அவன், அங்கிருந்த இருவரைச் சுட்டுக் கொன்று, பின், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தான்.அமெரிக்காவில், அடிக்கடி துப்பாக்கிச்
சூடு சம்பவங்கள் நடக்கின்றன.'உலக மக்கள் தொகையில், 4 சதவீதம் தான் அமெரிக்கர்கள். ஆனால், உலகின் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்களில், 40 சதவீதம் அமெரிக்கர்களாக இருக்கின்றனர்' என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement