Advertisement

ஸ்கூட்டர் மானியம்... என்னாச்சு!கிடப்புக்கு போனது விண்ணப்பம்:  காத்திருக்கும் பயனாளிகள் அதிருப்தி

உடுமலை:மானிய விலையில், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பணிக்கு செல்லும் பெண்களுக்கு, மானிய விலையில் 'ஸ்கூட்டர்', வழங்கும் திட்டத்தை, அரசு அறிவித்தது.

வாகனத்தின் மொத்த விலையில், 25 ஆயிரம் ரூபாயை அரசு மானியமாக வழங்குவதே இத்திட்டமாகும். திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், ஓட்டுனர் உரிமம், அல்லது தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.
ஜன., மாதத்தில், அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறுகிய நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது.

இதனால், பலரும் அவசர கதியில் உரிமம் பெற்று, விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். பலர், ஓட்டுனர் உரிமம் பெற தாமதமானதால், விண்ணப்பிக்க முடியாமல் தவறினர்.
இந்நிலையில், பிப்., மாதம் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை, துவக்கினர். திட்டத்தின்படி, பிப்., 24ம் தேதிக்குள், இதற்கான பணிகளை நிறைவுசெய்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு வட்டாரத்திலும், முதற்கட்டமாக, பெயரளவில் சில பயனாளிகளின் விண்ணப்பங்களை மட்டும் சரிபார்த்து தேர்வு செய்தனர்.

இதன்படி, திருப்பூர் மாவட்ட அளவில், மார்ச், மாதம் நடந்த விழாவில், சிலருக்கு மட்டும் மானிய விலையில், ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், இத்திட்டம் நடைமுறையில் உள்ளதா என பயனாளிகள் சந்தேகப்படும் வகையில், அடுத்தகட்ட அறிவிப்புகள் எதுவும் வழங்கப்
படவில்லை.
ஒவ்வொரு ஒன்றியத்திலும், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயனாளிகள் தேர்வு செய்யப்
படுகின்றனர்.
உறுதிசெய்யப்பட்ட இறுதி பயனாளிகளின் பட்டியலும்
தெரிவிக்கப்படவில்லை இந்நிலையில், விண்ணப்பித்து, ஒன்பது மாதங்களை கடந்து விட்ட நிலையிலும், திட்டத்தால் பயன்பெறுவோமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் பயனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விண்ணப்பித்த பெண்கள் கூறுகையில்,''ஒன்றிய நிர்வாகங்களில் விசாரித்தால், பட்டியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தில், பயனாளிகளின் விபரங்கள் சரிபார்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். மற்ற மாவட்டங்களில், பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் வரை வந்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், திட்டத்தின் நிலை என்ன என்பது கூட தெரியவில்லை.

பஸ் வசதியில்லாத பகுதிகளுக்கு பணிக்கு செல்லும் பெண்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், திட்டம் தொடர்ந்து தாமதமாவது வேதனையை ஏற்படுத்துகிறது,'' என்றனர்.

சொன்னார்கள்... செய்வார்களா?
திருப்பூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக, 100 பயனாளிகளுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. கடந்தாண்டு 2017-18ன் படி, ஊரக பகுதிக்கு, 1,370 மற்றும் நகரப்பகுதிக்கு, 2,160 என மொத்தமாக, 3,530 பயனாளிகளுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படும் என, விழாவில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில், நிதியாண்டு, 2018-19 துவங்கியும், பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement