Load Image
Advertisement

அனுமதியின்றி மணல் கொள்ளை தொடருகிறது கண்டுகொள்ளாத அதிகாரிகள்

   அனுமதியின்றி மணல் கொள்ளை  தொடருகிறது கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADVERTISEMENT
மதுரை, செப். 14-
மதுரை மாவட்டத்தில் பேரையூர், எழுமலை
உட்பட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மணல் கொள்ளை தொடருகிறது.
இம்மாவட்டத்தில் சோழவந்தான், சக்கிமங்கலம் போன்ற வைகை ஆற்று பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல்
அள்ளப்பட்டது. அருகிலுள்ள பட்டா நிலங்களை மேம்படுத்த மணல் அள்ளுவதாக அனுமதி பெற்று திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளினர். தற்போது வைகையில் தண்ணீர் செல்வதால் மணல்
அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரையூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டியுள்ள எழுமலை, டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம், வண்டாரியில் 300க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. இவைகளுக்காக சிலர் மலையடிவார பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்கின்றனர்.
ஒரு யுனிட் மணல் இரண்டாயிரம் ரூபாய் வரை செங்கல் காளவாசல்களுக்கு விற்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து மணல் பரவியுள்ளது. அந்த மணலையும் மாட்டுவண்டிகளில் ஏற்றி சென்று விற்கின்றனர்.
வருவாய்த்துறையினர், போலீசாரும் கண்டுகொள்வதில்லை. சிறப்பு கண்காணிப்பு குழுக்களை நியமித்து மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் நடராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement