Advertisement

பண்டிகை காலம் துவக்கம்; பதுக்கல் தடுக்கப்படுமா?

டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், பண்டிகை சீசனும் துவங்க உள்ளதால், உணவு பொருட்கள் பதுக்கலை தடுத்து, விலையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான, விநாயகர் சதுர்த்தி, நேற்று கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, தொடர்ந்து, பண்டிகைகள் வர உள்ளன. இதனால், டீசல் விலை உயர்வை
காரணம் காட்டி, உணவு பொருட்களின் விலையை, சிலர் செயற்கையாக உயர்த்த வாய்ப்புள்ளது.


இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு துறையின் கீழ், விலைவாசி கண்காணிப்பு குழு உள்ளது. உணவு துறை அமைச்சர் தலைமையில் செயல்படும், அக்குழுவில், கூட்டுறவு, உணவு, வேளாண் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் விலையை கண்காணித்து, விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பர்.


முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பண்டிகை சீசனும் வர உள்ளதால், அப்போது, அதிக விலைக்கு விற்க, தற்போதே, உணவு தானியங்களை பதுக்க வாய்ப்புள்ளது. இதனால், அவற்றின் விலையும் உயரும். அதை தடுப்பதற்கு,
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த விலை காய்கறி, மளிகை சந்தைகளுக்கு, விலைவாசி கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி, அரசு தொடர் ஆய்வில் ஈடுபட வைக்க வேண்டும்.


ஆய்வு தொடர்பான விபரங்களை, அதிகாரிகளிடம் பெற வேண்டும். இதன் வாயிலாக, வரும் பண்டிகை மற்றும் மழை காலங்களில், உணவு பொருட்களின் விலை உயராமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

    ஏற்கெனவே பதுக்க ஆரம்பிச்சாச்சு.... இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க... எண்ணெய் மற்றும் பருப்பு வெல்லத்தின் விலையை....

  • kumarkv - chennai,இந்தியா

    This is same like indian railways thakal and airlines dynamic pricing

  • Manian - Chennai,இந்தியா

    நல்ல எண்ணம்தான். ஆனால், "..ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த விலை காய்கறி, மளிகை சந்தைகளுக்கு, விலைவாசி கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி.." என்பதை நான்றாக கவனித்தால், ஒரு புதிய லஞ்ச மார்க்கம் திறந்துவிடும் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். 70 -80 % மக்கள் லஞ்சம் கொடுப்பது-வாங்குவது சரி என்நும்போது ,கிராமத்தார்கள் ஓட்டுக்களை விற்கும்போது, ".... உணவு பொருட்களின் விலையை, சிலர் செயற்கையாக உயர்த்த வாய்ப்புள்ளது... " என்பது ஜனநாயக விரோதமான சிந்தை அல்லவா? கோவணம் கட்டாத ஊர்லே கடடினவனை சும்மா விடுவார்களா? எல்லா கொள்ளைகளும் எந்த நல்ல சிந்தனையும் இல்லாத சமுதாயத்தின் பிரதிபலிப்பே. பொட்டு வைத்து, விபூதி இட்டு, குல்லாய் போட்டு, ஜபமாலை போட்டு பாவாடை உடுத்தும் எல்லா மதத்திறனாரும் சுமார் 90 % அயோக்கியர்களாக இருக்கிறார்களா என்பதை ஒப்புக்கொண்டால், ஒருவேளை எல்லோருமே லஞ்சவியாதிகளாக மாறி, லஞ்சம் ஒழியலாம். லஞ்சவாதியே என்ற ஒரே குலமே இந்தியாவில் நிலைத்து நிற்கும். லஞ்சம் இந்தியர்களின் பரம்பரை மரபணுவில் இணைத்து 1850 முதல் (கிழக்கிந்திய கும்பினி காலத்தில் கல்கத்தாவில் இது ஆரம்பித்தாக சரித்திரம் சொல்கிறது) இன்று நமது தேசிய சின்னமாகிவிட்ட்து. வெறும் புலம்புகளால் இந்த மரபணுவை மாற்ற முடியாது. இதற்கு தீர்வும் கிடையாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement