Advertisement

காசோலை பிரச்னை ரூ.90 ஆயிரம் இழப்பீடு

சென்னை:காசோலை பரிவர்த்தனை பிரச்னையில், நிதி கடன் நிறுவனம், வாடிக்கையாளருக்கு, இழப்பீட்டுடன் சேர்த்து, 90 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கே.கே.நகரைச் சேர்ந்த, ஷகீலாராணி தாக்கல் செய்த மனு:சென்னை, அண்ணாசாலையில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, பஜாஜ் சி.டி., 100 பைக் வாங்கினேன். தவணை தொகைக்காக, பூர்த்தி செய்யப்பட்ட, 20 காசோலைகள் வழங்கினேன்.
தவணை செலுத்தி வந்த நிலையில், தவணை தொகை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி, என் அனுமதி இன்றி, நிதி நிறுவனம் பைக்கை எடுத்துக்கொண்டது.பைக்கை பராமரிப்பும்
செய்யவில்லை. நான் செலுத்திய தவணை தொகையுடன், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க
வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், 'சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய
வேண்டும்' என, நிதி நிறுவனம் தெரிவித்தது.வழக்கில், நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:நிறுவனம் முறையற்ற வர்த்தகம் செய்துள்ளது. மனுதாரருக்கு, புதிய பைக் அல்லது காசோலைகளுக்காக, 60 ஆயிரம் ரூபாய்; இழப்பீடாக, 25 ஆயிரம் ரூபாய்; வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement