Advertisement

எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா?

லக்னோ : பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசையும் குறை கூறி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மிகப் பெரிய கூட்டணியை, காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் சமீபத்தில், 'பாரத் பந்த்'
நடத்தப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை.


இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து கூறிய மாயாவதி, இந்த விலை உயர்வுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசும் காரணம் என்றார். அவரது இந்தப் பேச்சு, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சி விலகுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பாரத் பந்த்தில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியும் காரணம் என, மாயாவதி கூறியுள்ளார்.இது மாயாவதியின் அரசியல் மற்றும் தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், அதிக தொகுதி களைப் பெறுவதற்காக, அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.


இருந்தாலும், எதிர்க்கட்சிகள் இடையேயான ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Ravindran Nair - Ahmedabad,இந்தியா

  சிவசேனா இல்லாமல் மஹாராஷ்டிராவில் சமீப காலமாக நடந்த எல்லா எலெக்ஷனிலும் பிஜேபி தனியாக வென்று உள்ளது நண்பரே.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எல்லாம் ஒரு தேர்தல் கணக்கு தான் மிரட்டினால் தானே சீட் அதிகமாக பெற முடியும்.

 • anand - Chennai,இந்தியா

  உண்மையை சொன்னால் காங்கிரஸுக்கு கோபம் வருகிறது.. ஆறு ஆண்டுகளில் 34 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இவர்கிறார் மன்மோகன், சிதம்பரம்,.,.ஏன் இந்த அவசரம்?

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இந்த மாயாவதியை இந்திய மக்கள் ஒருபோதும் பிரதமராக்கப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி மாயாவதியை பிரதமராக அமர்த்தப் போவதில்லை.

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  Congress think that other opposition parties are fools. But they are clever. Post 2019 scenario may suggest that if bjp is not able to form a government, if bjp support an opposition candidate, only bjp's support alone sufficient. If congress is required, congress support alone is not sufficient, other thukkada parties support may also be required because if congress improve it's 2014 tally that itself a wonder. Rahul's statements prove he is fit neither for a party nor nation.

 • s t rajan - chennai,இந்தியா

  மாயா கூட உண்மை பேசுகிறாரே ?

 • Aarkay - Pondy,இந்தியா

  மென்டல்களின் நோக்கங்கள், கொள்கைகளற்ற மாஃபியா தலைமையிலான கிச்சடி கூட்டணியால் ஈ, கொசு கூட பயப்படாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உண்மையை சொன்னால் ஆபத்துதான்

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ் நாட்டின் இப்போதய சீரழிவிற்கு முக்கியமான காரணம். மாநிலத்தில் எதிர்ப்பு, மத்தியில் ஆதரவு மக்களை குழப்பும். மாநில கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு பலவீனமடையும்.

 • GanesanMadurai -

  மாயாவதி "உண்மை" பேசியதை கான்கிரஸ் கட்சி விரும்பவில்லை போலும்.

 • Arasu - Ballary,இந்தியா

  எப்போது ஒன்றாக இருந்தார்கள் பிளவு படுவதற்கு, rahul தலைமையில் இவர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கட்சிகளுக்கு இடையிலான இயற்கயான பிளவை எப்படி மாற்ற முடியும்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement