Advertisement

சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓராண்டாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்,விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கும் 'சம்மன்' அனுப்பி விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது. இதனால் ஜெ. மரண சர்ச்சைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெ. மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப். 24ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 'மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணை கமிஷனுக்கு அலுவலகம் ஒதுக்கவே ஒரு மாதத்திற்கு மேலானது. அதன்பின் பொது மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை துவக்கப்பட்டது.


மூன்று மாதங்களுக்குள் பணி நிறைவு பெறாததால் கமிஷனின் பதவி காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது விசாரணை கமிஷனின் பதவி காலம் அக்.,24ல் நிறைவடைகிறது. இம்மாதம் 24ம் தேதி கமிஷன் துவங்கி ஓராண்டு நிறைவடைகிறது.


விசாரணை கமிஷனில் இதுவரை ஜெ. உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை கூறியுள்ளனர். 'மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த உணவு வழங்கப்பட்டது' என ஒரு தரப்பும்,'வழங்கப்படவில்லை' என்று மற்றொரு தரப்பும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.


ஜெ.,க்கு அளித்த மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.


'ஜெ.,உடல் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த கவர்னரை பார்த்து ஜெ., கட்டை விரலை காட்டினார்' என சில டாக்டர்கள் சாட்சியம் அளித்தனர். 'அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று அதே மருத்துவமனை டாக்டர்கள் சிலர் மறுத்தனர். இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சசிகலா,சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ளார்.


அவர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரிடம் நேரில் விசாரிக்க வேண்டி இருப்பதால் 'சம்மன்' அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அவரை அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதால் சிறைக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்து உள்ளது.


அதேபோல ஜெ.,க்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே,சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை மருத்துவர்களையும் நேரில் அழைப்பதற்கு பதிலாக 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அவர்களிடம் விசாரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.


துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் தங்கமணி,உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி,சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோரை நேரில் அழைத்து விசாரிக்கவும் கமிஷன் முடிவு செய்துள்ளது.


இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின் ஜெ.,மரண சர்ச்சை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என கமிஷன் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்.24க்குள் முடிவு! விசாரணை கமிஷன் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடந்த விசாரணை குறித்த தகவல்களை தொகுக்கும் பணி துவங்கியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  “என்ன தடாலடி.....???” தடாலடியா விசாரிச்சா ஜெ. திரும்ப வந்துடுவாங்களா..... இல்ல அதுக்குப் பின்னால உள்ள மர்மம் தான் வெளில வரப் போவுதா....??? வேஸ்ட் ஆஃப் டைம் & மணி.....

 • ஆப்பு -

  என்னாது? மெகா சீரியல் இல்லையா?

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Sasikala in spite of her huge wealth is neither living nor dying. Look at the enormous accusations against her from many. This is the real punishment for her inside the prison. What can be her mental status with so many enquiries and cases. We are yet to see a lady with so many cases in Courts. When the verdict for all cases are going to come. Do our Judiciary have any time frame to finalise these cases.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு சின்ன விஷயம், சதிகாரிக்கு உண்மை அறியும் டெஸ்ட் செய்வார்களே அந்த டெஸ்ட் செய்தால் உண்மை தானே வெளியே வந்து விடும்,

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  உடல் நலம் பாதிக்கட்டிருக்கிறது ஆகவே பிறகு வாருங்கள் என்று கூறப்போகிறார், அந்த நீதிமன்றத்தை அணுகினால் அவர்கள் சட்ட சிக்கல் இருக்கிறது, நீங்கள் விசாரிக்கும் போது நாங்களும் இருப்போம் என்று கூறப்போகிறார்கள், மொத்தத்தில் அங்கு சென்றால் கண்டிப்பாக கமிஷன் பதவிக்காலம் நீட்டிக்கப்படும், வந்தே மாதரம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  தினமலர் அதிமுக செய்தியை மட்டும் போடாதே திமுக செய்த ரவுடி தனத்தையும் போடு , அதிமுகவிற்கு எதிரி ttv என்றால் திமுகவிற்கு cctv ,எல்லா இடங்களிலும் cctv இருந்தால் ,இவனுங்க இப்படி பட்ட அயோக்கியனா என்று நினைத்து கட்சியை கலைத்துவிடுவார்கள் மக்கள்,இவர்களின் பெண்ணாசை , பொன்னாசை அடுத்தவனின் மண்ணாசை பெரிது ..

 • Sasidaran - Chennai,இந்தியா

  நீங்க உண்மையிலேயே விசாரணை செய்ய வேண்டியது - ராவ், ரெட்டி மற்றும் நாயடு தான் ..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சந்தேகத்தின் பேரில் விடுதலை செய்வதை போல், அதிக சந்தேகத்தின் பேரில் பத்து வருஷம் உள்ளவே வச்சிருங்கோ..

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  யாருக்கு ஜெயா மறைந்தது பற்றி கவலை? அவர் மறைந்து நெருங்கியவர்கள் கூட மறந்து நாளாகிவிட்டதே.. ஆட்சியில் இருப்பவர்கள் கூட அவர் வழியில் கொள்ளைகளில் மும்மரமாக இருப்பார்கள் .ஜெயாவின் மருமகனும் மருமகளும் அவர் சொத்தில் ஏதாவது பங்கு கிடைத்தால் மகிழ்வார்கள். அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாதபடி ஒரு தீர்ப்பு வரலாம்...முதல்வர், பிரதமரை கொன்று விட்டார்கள் என்பதற்காக யாருக்கும் இங்கு தூக்கும் கிடைத்து விட போவதில்லை ...இது தான் நமது பாரத நாடு .சுட சுட வடை கூட கிட்டாமல் போகலாம் . சுட சுட செய்திகளுக்கு இங்கு பஞ்சமில்லை ...அப்பல்லோ ஆஸ்பத்திரி அரசியல் வாதிகளுக்கு முக்கியமான ஆஸ்பத்திரி. அதனால் அதன் நிர்வாகவத்தினரை காப்பது அரசியவாதிகளின் கடமையாக இருப்பதால் அதை ஒழுங்காக செய்வார்கள். ..

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் விவரங்கள் மக்களுக்காக கிடைக்காது

 • tamil - coonoor,இந்தியா

  ஒரு ஆர்வமே ஏற்படவில்லை, ஏதோ கடமைக்கு சில விசாரணைகள் நடப்பது போன்ற தோற்றம் தான் ஏற்படுகிறது, மொத்தத்தில் ஓரங்க நாடகம்

 • rajan. - kerala,இந்தியா

  ஒரு சன்னமான பிரம்பு குச்சியால ஒரு மணி நேரத்தில முடிக்க வேண்டிய கேசை இப்படி ரப்பராய் ஆளாளுக்கு இழுத்து கொண்டு போவுறீங்களே. இந்த கூத்தடிப்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா.

 • karutthu - nainital,இந்தியா

  நிச்சயம் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவவன் வினை அறுப்பான் என்ற பழமொழி பொய்யாகாமல் இருந்தால் சரி சர்க்காரியா கமிஷன் மாதிரி புஸ்ன்னு போகாமல் இருந்தால் சரி .

 • Indhiyan - Chennai,இந்தியா

  கமிஷன் கமிஷன் என்று எதுக்கு வேலை வெட்டி இல்லாம. யாராவது தப்பு என்று கமிஷன் சொன்னால், அப்படியா சரி என்றோ அல்லது ஏதாவது காரணம் சொல்லி குப்பை தொட்டியில் போட்டு விடுவார்கள். சும்மா டைம் பாஸ், அவ்வளவுதான். அதுக்கு மீறி கேஸ் போட்டால், இருக்கவே இருக்கிறது கீழ் கோர்ட், மேல் கோர்ட், மேல் மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட். இன்னும் 20 வருஷம் ஆகும்.

 • ஸாயிப்ரியா -

  ஜெ அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது முதல் இறந்த பின்னும் அவருக்கு நெருக்க மானவர்களை ஏன் அவரது உறவினர்களை கூட அனுமதிக்காது விரட்டியது விலக்கியது ஏன்? இதற்கான உண்மையான பதில் சினேகிதியிடமோ அவரது உறவினர்களிடமோ வராது.

 • உஷாதேவன் -

  இந்த நேரம் சினேகிதிக்கு ட்ரெயினிங் பீரியட் முடிந்திருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஜெ உடன் இருந்தே கொன்ற வியாதி சசி.. எல்லோரையும் கண் துடைப்புக்கு

 • rajan. - kerala,இந்தியா

  ஓ , அப்போ இத்தினி நாள் விசாரிச்சு இன்னுமா தெளிவு பிறக்கவில்லை? சிறை கிழவியை விசாரிக்க போறிங்களாக்கும்.? போங்க நல்லா அல்வா கொடுப்பாக வாங்கிக்கோங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரே நாளில் சசியிடம் மூன்றாம் தர விசாரணையில் உண்மையை உலகிற்கு கொண்டு வந்திருக்க முடியும்... ஆனால் ஒரு கமிஷன் அமைத்து காலத்தை கடத்துகிறார்கள்... மக்களின் ஞாபக மறதி மீது அரசியல்வாதிகளுக்கு அசாத்திய நம்பிக்கை...

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஒரு முதல்வருக்கு தரும் பாதுகாப்பில் தவறியதால்... மத்திய அரசு பதவி விலகுமா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இறந்தபிறகும் அம்மாஜியின் சமாதிகூட அடிவாங்கியது ஆறுமுகசாமி அவர்களுக்கு நினைவிருக்கட்டும்

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காலம், மக்களின் வரிப்பணம் விரயம். உண்மை வெளிவரப்போவதில்லை. வந்தாலும் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

 • A.Robet - chennai,இந்தியா

  இதற்கு எதற்கு ஒரு கமிஷன் வீண் செலவு யாரை திருப்தி படுத்தணுமோ அதற்கு தகுந்த போல் ஒரு ஜக்கையை கொடுக்க வேண்டியது தானே எதற்கு பணவிரயம் காலவிரயம் ஒய்வு காலத்தில் பொழுது போகவில்லை என்றால் காலாற கோவிலுக்கு செல்லலாமே புண்ணியமாவது கிடைக்கும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நெருங்கிக் கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலை மையமாக வைத்து இன்னும் என்னவெல்லாமோ நடக்க இருக்கிறது. சசி ஒரு பகடை என்பதும் ஜெயா மரணத்திற்கான உண்மையான சூத்திரதாரி யார் என்பதும் அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவருக்கும் புரியும். நீதியின் கைகள் அது வரை நீளாது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

 • balu - Chennai,இந்தியா

  வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒண்ணுமே இருக்காது இந்த விசாரணை சசிகலாவுக்கு மிகவும் பெரிய ஆதரவை பெற்று தரப்போகிறதாம். அதான் அவர் அம்மாவை புதைக்க சொல்லிவிட்டாராம் பிராமணர்கள் எரிக்கத்தான் செய்வார்கள் நிறைய ப்ரோப்லேம் செய்தால் சடலத்தை தோண்டி எடுக்க சொல்லிவிடுவார் அப்போதுதான் பெரிய பிரளயமே வெந்நீர் அந்த ஆசிரியர் அறிவுரையை அதுவும் டெல்லி ஆதரவுடன் பிடித்த பிள்ளையார் குரங்காகிப்போய்விட்டதாம் பாருங்கள் பூமராங் ஆகி அவரை அரசியலில் இருந்து விழுங்கப்போகிறது.

 • ravisankar K - chennai,இந்தியா

  பதவி ஓய்விற்கு பிறகு பணம் சம்பாதிக்க எவ்வளோவோ நேர்மையான நல்ல வழிகள் உள்ளன . இதெயெல்லாம் நீதிபதி ஆறுமுகசாமி போன்றோர் உணர வேண்டும் . அதற்கும் மேல் வந்தவன் போனவன் எல்லாம் விசாரித்துக்கொண்டு பிறகு குறுக்கு விசாரணை என்று நேரத்தை வீணடித்துக்கொண்டு . எவனும் உண்மையை சொல்ல போவதில்லை . இப்படியே இழுத்துக்கொண்டு போனால் ஆறுமுகசாமிக்கு வெறும் அவமரியாதைதான் மிஞ்சும் .

 • ருத்ரா -

  குறுக்கு விசாரணை ஸ்பெஷல் ???

 • Bhaskaran - Chennai,இந்தியா

  முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்ந்த ஜெயாவின் மறைந்த விசாரணையும் முரண்பாடுகளின் மூட்டை யாகவே இருக்கும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து கிடையாது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மக்களின் பணத்தை கண்டதுகளும் அனுபவிப்பதை நினைத்தால் தமிழனுக்கு மூளை சற்றும் இல்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  தீர்ப்பு 2048 ஆம் வருடம் வெளியிடப்படும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஆறுமுகசாமி கமிஷன் இறுதியில் ஜே செயற்கையாகவும் இறக்கவில்லை இயற்கையாகவும் இறக்கவில்லை விஞ்ஞான முறையில் இறந்திருக்கார்ன்னு சொல்லப்போகுது இந்தமாதிரி குழப்பமா முடிவுக்கு வந்தாத்தான் இன்னும் அம்பது வருஷத்த ஓட்ட முடியும் சர்க்காரியா கமிஷன் மாதிரி , கமிஷன் போடுறதே அரசியல் நடத்தத்தான்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஜெயாவின் கொலை பழி, சசியின் மீது விழும் என்று ஜெயா கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். பன்னீரின் தர்ம யுத்தமும், பழனியின் நன்றி கடனும் நன்றாக வேலை செய்கிறது.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  எங்கள் சின்னம்மா நிரபராதி என தீர்ப்பு வரும், பன்னீர் செலவம் சொல்லும் பொய் மூட்டைகளை உடைத்து எறிவார் எங்கள் தியாக தலைவி சின்னம்மா அவர்கள்.. மேலும் கழக பொதுசெயலாளர் பதவி தானாக தேடி வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement