Advertisement

ஜெ.,க்கு, 120 முறை, 'பிசியோதெரபி' சிகிச்சை!

சென்னை : 'அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு, 120 முறை, 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது' என, டாக்டர் ராஜ் பிரசன்னா தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம், அப்பல்லோ மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ராஜ் பிரசன்னா, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம், 2 மணி நேரம் விசாரணை நடந்தது.


கடந்த, 2016 செப்., 29ல், ஜெ.,க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க, ராஜ் பிரசன்னா சென்று உள்ளார். அப்போது, ஜெ., உடல் நிலை, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையில் இல்லை. அவர் உடல்நிலை சரியான பின், அக்., 2 முதல், ஜெ.,க்கு பிசியோதெரபி பயிற்சி கொடுத்துள்ளார். மொத்தம், 59 நாட்களில், 120 முறை, சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.டாக்டர் விக்னேஷிடம், தீவிர சிகிச்சை பிரிவில், ஜெ.,க்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், 'செயற்கை மூச்சு குழல் பொருத்தப்பட்ட பின்னும், அவர் சுயமாக சுவாசித்தார். இரவு நேரங்களில் மட்டும், ஐந்து மணி நேரம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது' என, தெரிவித்துள்ளார்.


கவர்னர் அக்கறை காட்டாதது ஏன்?
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ், ஐந்து முறை, மத்திய அரசுக்கு, அறிக்கை அனுப்பி உள்ளார்.


இது தொடர்பாக, செப்., 11ல் விசாரணைக்கு ஆஜரான, கவர்னரின் செயலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரமேஷ்சந்த் மீனாவிடம், விசாரணை கமிஷனில், சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


* கவர்னர், முதன் முறையாக, 2016 அக்., 1ல், மருத்துவமனைக்கு சென்றபோதே, ஜெ., உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், மாநில முதல்வராக இருந்தவருக்கு, மேல் சிகிச்சை அளிக்க, ஏன் கவர்னர் பரிந்துரை செய்யவில்லை?* ஜெ., கவலைக்கிடமாக இருந்த நிலையிலும், மருத்துவமனை அறிக்கையில், ஜெ., நலமாக இருந்ததாக தெரிவித்தது குறித்து, கவர்னர் ஏன் விசாரிக்கவில்லை?


* ஜெ., உடல்நிலை தொடர்பாக, இருவர் பொது நல வழக்கு தொடர்ந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து, கவர்னர் மாளிகை ஏன் அக்கறை காட்டவில்லை?


* எதிர்க்கட்சி தலைவர் அழுத்தம் கொடுத்த பின்னர் தான், முதல்வரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதை, ஏன் முன் கூட்டியே செய்யவில்லை?


* கவர்னர், யார் கொடுத்த தகவல் அடிப்படையில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்?


இவ்வாறு சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியவில்லை' என்றே, கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்த போது, அவரது செயலராக இருந்த, ரமேஷ்சந்த் மீனா பதில் அளித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  100 முறையோ 120 முறையோ..அதெல்லாம் ப்ரச்னையில்ல..இட்லி சாப்பிட்டாங்களா?. .எத்தனை சாப்பிட்டாங்க ? இதான் ப்ரச்னை.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  சாதாரணமனிதனானாலும், பெரிய பதவிகளில் இருப்பவர்களானாலும் இக்கட்டான சூழ்நிலையில் வெளியில் நலமாக இருப்பதாக கூறுவது வழக்கம் தான் என்று நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் பொது அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்திற்கு மட்டும் தெரியவில்லையா?. அல்லது உண்மையை கண்டறிவதற்கு அதை இதை கூறி அனைவரையும் குழப்ப வேண்டியுள்ளதா? அல்லது உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போயுள்ளதா ஆணையம்?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒருத்தர் நாடுநாடா சுத்தி நம்ம காசை கரியாக்கறார். இங்கே ஒரு டம்மி பீஸ் மற்றும் குற்றவாளியாக வாழ்ந்து மறைந்த ஒருவரின் மரணம் மீது காசை கரியாக்கறார்.

 • karutthu - nainital,இந்தியா

  படுபாவிகள் அவர் உயிரோட விளையாடிவிட்டார்கள் ஆண்டவன் (கடவுள் ) தான் இவர்களுக்கு இப்பிறவிலேயே தண்டனை கொடுக்க வேண்டும் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஜெ யின் கூடா நட்பு கேடாய் போனது,,,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மறைக்கப்பட்ட உண்மைகள் எப்போ வெளியே வரும் ?

 • ஆப்பு -

  கெவுனருக்கு இரண்டு மாநிலப் பொறுப்பு... மாகாராஷ்ட்ரா, மற்றும் தமிழ்நாடு. காலைல சென்னை, சாயங்காலம் பம்பாய் போனா ரெண்டு வாரம் அம்பேல். இதுல என்னத்த பரிந்துரை பண்ணி... ஏதோ வேலைக்கு ஆள் இல்லைங்கற மாதிரி ஒரே ஆளை கெவுனராப் போட்டு...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அளவில்லா பொய்கள் என்பது இதுதான்

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  வாய்மையே வெல்லும். தள்ளுவண்டி தள்ளுவண்டின்னு கேலி கிண்டல் பண்ணி கெக்கே பிக்கேன்னு சிரிச்சவருக்கு 120 முறை 'பிசியோதெரபி' சிகிச்சை

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  பெட்ரோல் விலை உயர்வை தமிழக மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்கு இப்படி செய்திகள் வருகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement