Advertisement

பழனிசாமி, பன்னீருக்கு டில்லி ஐகோர்ட், 'நோட்டீஸ்'

அ.தி.மு.க., சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.


அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த, ஜெயலலிதா மறைந்த பின், கட்சி இரு அணிகளாக பிளவுபட்டது. பின், இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து, 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.இதற்கேற்ப, கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியிலும், திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை, தலைமை தேர்தல் கமிஷனுக்கு மாற்றியது.


இதை எதிர்த்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், டில்லி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.


இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அதை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 'அ.தி.மு.க., விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சசிகலா உட்பட, அனைத்து தரப்பினரும், மூன்று வாரத்திற்குள், தங்கள் விளக்கத்தை, தேர்தல் கமிஷனிடம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.'அதன் பின், அடுத்த நான்கு வாரத்திற்குள், தேர்தல் கமிஷன், அதை விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்' என்றும், கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது, பன்னீர், பழனி தரப்பினருக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து, வழக்கு தொடர்ந்த, கே.சி.பழனிசாமி கூறியதாவது: கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே, தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றவே, வழக்கு தொடர்ந்தேன். தற்போதைய நீதிமன்ற உத்தரவின்படி, ஏழு வாரத்திற்குள், தீர்வு கிடைத்து விடும். இவ்வாறு, அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  கட்டுக்கடங்காத அறிவியல் ஞானம் கொண்டு , 1976 இல் இருந்து அதிமுக கட்சி விதிகளை மாற்றி அமைத்த வில்லேஜ் விஞ்ஞானிகளை பாராட்டாமல் ,பக்கிகள் கேள்வி கேட்கிறார்களே ??? என்னடா இது ??? இந்த தமிழ நாட்டுக்கு வந்த சோதனை. ???

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  உங்கள் தலைவி ஜெ ஜெ வே சசி குடும்பத்தின் கொத்தடிமை யாகத் தானே கடந்த பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார்? இந்த செய்தி க்கு சம்பந்தமே இல்லாத திமுகவை இழுத்து எழுத என்ன அவசியம்? பிரச்சினையை திசை திருப்பறாராம்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  அதிமுகவில் தலைமை ரத்த உறவு, வாரிசுகள் இல்லை, அதனால் தேக்கம். திமுக வில் வாரிசுகள் நிறையபேர்கள், ஆதரிக்கும், குடும்ப கொத்தடிமைகள், ஆமாம் சாமி போடுவார்கள். கடைசிவரை பதவி, எட்டா கனியாகவேஇருக்கும். தொண்டர்களுக்கு.அதிமுகவில் அப்படியில்லை,கடை கோடி தொண்டனுக்கும், பதவி தேடிவரும். பழனிச்சாமி,பன்னீர்செல்வம், முதல்வர் துணை முதல்வர், இருவரும் தலமை ரத்தவாரிசுகள் இல்லை. இதுகுடும்ப கொத்தடிமைகளுக்கு, தெரியாது.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  75% உங்களுக்கு - 25% எங்களுக்கு இது கூட பத்தல்லையா? அப்போ, 80% உங்களுக்கு 20% எங்களுக்கு ஓகேவா.. சீக்கிரம் முடிங்கப்பா.. நாக்கு தள்ளுது.

 • A.Robet - chennai,இந்தியா

  திமுகவில் அதன் தலைவர் மறைந்த ஒரு மாதத்திற்குள் செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி முறையாக தலைவரை தேந்தெடுக்க வில்லையா இவர்கள் ஏன் எதையும் முறையாக செய்வாகில்லை இது ஒரு அடிமைகளின் கூட்டம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எம்.பி., - கே.சி.பழனிசாமி தம்மை சுறுசுறுப்பாக ஆக்கிக்கொள்கிறார்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதிமுக திமுக போல குடும்பக்கட்சி இல்லை... மற்றப்படி வேறு ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  நமக்கு என்ன கவலை தர்மயுத்தரே? நாம் எதற்கும் கவலைப்படாமல் விழா கொண்டாடி மகிழ்வோம்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தா ஓ பி எஸ் அணியிலும் இருந்திருக்க மாட்டார் ஈ பி எஸ் அணியிலும் இருந்திருக்க மாட்டார் மாதவன் தீபா அணியிலும் இருந்திருக்க மாட்டார். சசிகலா உடன்தான் இருந்திருப்பார் அந்த உடன்பிறவா சகோதிரி அதனால சசிகலா அணிதான் உண்மையான அ தி மு க. இல்ல ஜே அணின்னு தனியா ஒரு அணிய ஆரம்பிச்சுருப்பாரோ ?

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  பொது செயலாளர் பதவிக்கு மறுபடியும் தேர்தல் வரும் அப்போது எங்கள் சின்னம்மாவே வெற்றி பெறுவார்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement