Advertisement

'என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது'

புதுடில்லி : ''லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற, 'என் ஓட்டுச் சாவடி, வலிமை மிக்கது' என்ற வாசகத்தை, தொண்டர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நல்லுறவு :
பிரதமர் நரேந்திர மோடி, 'நமோ மொபைல்' செயலி வாயிலாக, பா.ஜ., தொண்டர்களுக்கு ஆற்றிய உரை: பா.ஜ.,வின் மிகப் பெரிய பலமே, அதன் தொண்டர்கள் தான். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், வரலாறு காணாத வெற்றியை, பா.ஜ., பெறப் போவதை,
தொண்டர்களின் நான்காண்டு கால அயராத உழைப்பே உறுதி செய்துள்ளது.


தொண்டர்கள் அனைவரும், அவர்களது தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுடன், தொடர்ந்து பேசி, நல்லுறவை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், நம் தொண்டர்களுடன், 20 குடும்பங்களும், இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்படி, உறவை பலப்படுத்துங்கள்.


'என் ஓட்டுச்சாவடி, வலிமை மிக்கது' என்ற வாசகத்தை, தொண்டர்கள் அனைவரும் பின்பற்றி, கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்.


கடின உழைப்பு:


பா.ஜ.,வுக்கு, 2014ல் வீசியதை விட, ஆதரவான காற்று, தற்போது பலமாக வீச துவங்கி உள்ளது. அதில் அடித்து செல்லப்படுவோமோ என பயந்து தான், எதிர்க்கட்சிகள், ஒன்றோடு ஒன்று, கைகோர்க்க துவங்கி உள்ளன.
பா.ஜ.,வில் மட்டும் தான், சாதாரண தொண்டன் கூட, தலைவனாக முடியும். இன்று நான் அமர்ந்துள்ள இடத்தில், நாளை வேறு ஒரு தொண்டன் வந்து அமர முடியும். ஆனால், காங்.,கில், இது சாத்தியமே இல்லை.


அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாகங்கள் செய்யும் சில, காங்., தொண்டர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. அவர்கள், ஒரே ஒரு குடும்பத்தின் நன்மைக்காக, இவ்வளவு கடினமாக உழைக்கின்றனர். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • kulandhaiKannan -

  தல! உங்களை யாரும் அசைக்க முடியாது

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு சாமி அருள் வாக்கு கொடுத்த கணக்குத்தான்யா..எங்களை விட்டிட்டு அய்யா ஓரமா காஞ்சி கூழை குடிச்சிட்டு இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுறோம். இது பணக்கார நாடுதான்ய, தெரியாம நாங்க ஏழையா பொறந்து தொலைச்சிட்டோம். உங்களுக்கு அருவெறுப்ப இருந்த சொல்லிடு அய்யா, நான் எங்கேயாவது பொய் கண்ணுல படாம உயிர் வாழ்த்துகிறோம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இத்தாலி இத்தாலி என்று தமிழக த்தில் மட்டுமே சில பீஜேபீ ஆதரவாளர்கள் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். இத்தாலி அரசாங்கமோ அல்லது இத்தாலி ஊடகங்களோ ஏன் சாதாரண இத்தாலி குடிமகன் கள் கூட சோனியா/ ராகுல் பற்றி பேசுவதில்லை. ஏன் பலருக்கு தெரியக்கூட தெரியாது. சும்மா சும்மா இத்தாலி/ அரபி/ வாடிகன்/ என்று புலம்புவதில் என்ன அல்ப சந்தோஷமோ. அ.ஜெ.ராமன் கூட, ஒருமையில் அநாகரிக அவமரியாதையாக எழுத ஆரம்பித்து விட்டது அதிர்ச்சி. வலுவான விளக்கங்கள் எதிர் வாதங்கள் எதுவுமே பீஜேபீ யிடம் இல்லை. மதம், இனம், மொழி, ஜாதி இவற்றை முன் வைத்து தான் வரும் தேர்தலில் கலாட்டா பண்ண வேண்டியிருக்கிறது

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  அதுதான் EVM இருக்கிறதே. என்ன கவலை?

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆதரவாளர்கள் ஆதரிக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள் எதிர்க்கிறார்கள் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்.

 • sahayadhas - chennai,இந்தியா

  என்ன வேணாலும் செய்ஞ்சுட்டு போங்க இந்திய மக்களின் 3 வேளை சாப்பாட்டின் மீது மண்ண அள்ளி போடாம இருந்தா சரி

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கார்த்திக் என்பவரின் நெற்றி யடிக் கருத்துக்கு , பீஜேபீ வாசகரிடமிருந்து பதில் இல்லை அவரை குடிகாரர் என்று அவதூறு எழுதுகிறார். இந்த ஸ்டைலை பீஜேபீ தொடர்கிற வரை தமிழக த்தில் தனியாக நின்றாலும் கூட்டணி போட்டாலும் நோட்டாவைக் கூட தாண்டாது. இதற்கு பீஜேபீ யினரின் அராஜக, ஆணவ, அகம்பாவமும், பிறரை அநாகரிக மாக அவமரியாதையாக வன்மத்துடன் எழுதுவதும், எதிர் கருத்து எழுதுபவரை வேற்று மதத்தவன் என்றும் சொல்கிற பெரும் கூட்டம் ஒன்று இந்த பக்கங்களில் உலவுகின்றது. அதை பெரிய சாதனை என்று வேறு நினைத்து கொள்கிறது. இதில் படித்த நாகரிகமான வர்களும் அடக்கம். இங்கே பேசும் அதே த்வனியில் வேறு எங்கே பேசினாலும் கேட்பவர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவார்கள். ஆனால் இவர்கள் இப்படியெல்லாம் எழுதுவது செம்ம காமெடி. சூப்பர் டைம்பாஸ்.

 • Meenu - Chennai,இந்தியா

  உங்களின் வலிமை எப்படின்னு தேர்தலில் மக்கள் தீர்மானிச்சு சொல்லுவாங்க... அது வரைக்கும் கூவுவது சற்று குறையுமா....

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இவர் EVM மெஷினை சொல்லுகிறார் போல இவர் வாயால் பாணி பூரி சுட்டு ஏமாற்றியதை மக்கள் உணர ஆரம்பித்து விட்ட்டார்கள் இவர் வெளி ஊரில் இருந்து கருப்பு பணத்தை 100 நாட்களில் கொண்டு வந்து ?????? என்றார் அது நடக்கவில்லை அனால் உள்ளூரில் கடன் வாங்கியவர் இவர் ஆட்சி காலத்தில் அழகா வெளியூர் தப்பி விட்டார் இதில் இருந்து உள்ளூரில் ஓணான் பிடிக்கவில்லை அசலூர் சென்று பாம்பு பிடிக்கப்படும் கதை தான் சிலரை சில நாள் ஏமாற்றலாம் பலரை பலநாள் ஏமாற்றலாம் எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது ரீல் அறுந்து பல வருடம் ஆயிற்று ஏழை தாயின் மகனே

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  ஊரு பூரா போய் சொல்லோணும்.. அண்ணே.. நல்லவரு..வல்லவரு.. வாயால வடை சுடுறதுல பெரியவரூ... அவரு ஒரு ஆள் இந்த ஆல் அழகு ராஜ்-ன்னு போய் சொல்லோணும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உண்மை எளிமையான திறமையான தொண்டர்கள் தலைமை ஏற்கும் நிலை உள்ள ஒரே கட்சி பாஜக தான்

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  அரசியல்வாதிகள் எவனும் மக்கள் படிப்பறிவு பெறுவதை விரும்புவதில்லை

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  வாங்க காத்துகிட்டு இருக்கோம். எங்க வோட்டு சீட்டும் வலிமையானதுதான். சரியான ... இருந்தால் ஒட்டு மெஷினில் கோல்மால் பண்ணாம, அரசு இயந்திரம், அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்யாம ஜெய்ங்க பார்க்கலாம்.

 • Shanu - Mumbai ,இந்தியா

  Yes. EVM is strong and s as it set for LOTUS.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மக்கள் மற்றும் அவர்களின் வாக்குகள், பீஜேபீ யின் சாவடிகளை விட நிச்சயம் வலிமையானவை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //..ஆட்சியில் வந்த நல்ல பலன்களை அருகில் உள்ளவர்களுக்கு ..// இந்த ஆட்சியில் வநத ஒரே ஒரு - ரிபீட் - ஒரே ஒரு பலன் கூட இல்லையே. இந்த ஆட்சி பற்றி பேச ஆரம்பித்தால் வேதனைகளும் அவஸ்தை களும் நாட்டை இவர்கள் நாசமாக்கியதும் தான் நிறைய இருக்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆமாமாம்..ப்ரீ செட் செய்யப்பட்ட மின் அணு வாக்குப்பெட்டிகள் வலிமையானவைதான்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆமாம் இவரை மீறி யாரும் எதுவும் செய்துவிடமுடியாது...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நீ கில்லாடிதாம்ப்பா ஒத்துக்கறோம். ஆனால் God is great. தன்னை மறந்தவர்களை நிராகரிப்பவர்களை தங்கத்தட்டில் சாப்பிட வைப்பதும் தலைக்கு மேலே தங்கமும் வைடூரியம் கலந்து கட்டிய கூரையால் வேய்ந்திருப்பதும் அழிவை நோக்கிய பயணத்தின் அடையாளங்கள்.

 • A.Robet - chennai,இந்தியா

  அவர்கள் ஒரு குடும்பத்திற்காக உழைப்பதாக சொல்கிறீர்கள் குடும்பமற்ற நீங்கள் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்கள் மீதும் ஜிஎஸ்.டி வரி சுங்க வரி உற்பத்திவரி வருமானவரி இன்னும் பிற பல வரிகளை போட்டு மக்களை திக்கு முக்காட வைக்கிறீர்களே அதையும் மக்களிடம் எடுத்து சொல்ல சொல்லுங்கள் உங்கள் சாதனையாக குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இருபதாயிரம் கோடி ரூபாய் வாரா கடனின் மர்மத்தையும் எடுத்து சொல்ல சொல்லுங்கள்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  EVM ஐ பத்திரமா பார்த்துகோங்க..என்று அர்த்தம்..

 • krishnan - Chennai,இந்தியா

  BJP இந்த நாட்டில் இருப்பது மக்களின் சகிப்புத்தன்மையால் மட்டுமே அதேசமயம் அதிகமாக ஆடினால் அடித்து துரத்தி விடுவார்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நல்ல திட்டம்... ஒவ்வொருவரும் மோடியின் ஆட்சியில் வந்த நல்ல பலன்களை அருகில் உள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்லுவது அவசியம்...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இருப்பதால், என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது".

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  'என் கை வலிமை மிக்கது போட்டு சாவடி' ன்னு வாசகத்தை வெச்சு இருந்தா பொருத்தமா இருந்திருக்கும் . மாட்டுக்கறி சாப்பிடுவர்களுக்கு எச்சரிக்கையா இருந்திருக்கும்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  போன தேர்தலில் மோடிக்கு ஆதரவு அலை வீசியது. ஆனால் அவர் பணமுடக்கம் மற்றும் gst என்று இரு திட்டங்களை முறைப்படி ஆராயாமல், திட்டமிடாமல் அமுல் படுத்தியதால், இந்தியாவின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதை கூட நான் பொறுத்துக்கொள்வேன். ஆனால், மோடி பக்தர்கள் தினமும் தொடர்ந்து அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகள் தான் என்னை பெரிய அளவில் அதிருப்தி அடைய செய்துள்ளது. முதலில் அவற்றை நம்பிய நான், பின் உண்மைகள் புலப்பட ஆரம்பித்தன. பொய்கள் ஒரு போதும் நிலைத்து விடாது. பாகிஸ்தான் கடந்த ஐம்பது வருடங்களாக திரும்ப திரும்ப சொல்லி பாதுகாத்த வந்த பொய்கள் கூட, ஒவ்வொன்றாக இப்போது வெளிச்சத்திற்கு வெளிவர தொடங்கிவிட்டன. மோடி பக்தர்கள் பொய்களை குறைத்து கொள்வது, பிஜேபி கட்சிக்கு நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement