Advertisement

தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு

புதுடில்லி : உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வுகளில் நிலுவையில் உள்ள, பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளிப்பதற்கான முயற்சிகள் வேகமெடுத்துள்ளன.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, அக்., 2ல், ஓய்வு பெறுகிறார். அவரது தலைமையிலான அமர்வுகள், பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகின்றன. விதிகளின்படி, இந்த வழக்குகளில், இந்த அமர்வுகள் தீர்ப்பு அளிக்காவிட்டால், அந்த வழக்குகளை, புதிதாக நியமிக்கப்படும் அமர்வுகள் மீண்டும் விசாரிக்க வேண்டும்.


ஏற்கனவே, அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த முக்கிய வழக்குகளில்
மீண்டும் விசாரணை நடத்தினால், அது, உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும். அதனால், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் பல்வேறு முக்கிய வழக்குகளில், அக்., 2க்கு முன், தீர்ப்பு அளிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.


இந்த அமர்வுகளில் உள்ள நீதிபதிகள், தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து, அமர்வுகளில் அதிக நேரம் அமர்கின்றனர். சில நீதிபதிகள், தங்கள் விடுமுறைகளை குறைத்துள்ளனர்; சிலர் ரத்து செய்துள்ளனர். தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு, இன்னும் சில நாட்களே உள்ளதால், உச்ச நீதிமன்றத்தில், திடீர் பரபரப்பும், சுறுசுறுப்பும் ஏற்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுகளில் உள்ள முக்கியமான வழக்குகளில், 'ஆதார்' செல்லுமா என்ற வழக்கு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவதற்கு, பெண்களுக்கு அனுமதி அளிக்கக் கோரும் வழக்கு உள்ளிட்டவையும் இறுதிக்கட்ட விசாரணையில் உள்ளது.


'ஒரு பெண், விருப்பத்துடன் மற்றொரு ஆணுடன் உடலுறவு கொள்ளும்போது, ஆண் மீது மட்டும் விபச்சார வழக்கு தொடரப்படுவதும், அந்தப் பெண் மீது நடவடிக்கை ஏதுமில்லை' என்ற சட்டத்தை மாற்ற கோரும் வழக்கையும், தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.


அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கவும் கோரும் வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வாறு, 10க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகளில், அடுத்த சில வாரங்களில் தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  போகும் பொது நாட்டுக்கு நல்லதை செய்யும்படியான தீர்ப்பை சொல்லுங்கயையா. சம்பாதித்தது போதும் என்னு திருப்தியோடு, உங்க புள்ள குட்டிகளுக்கு புண்யத்தை சேருங்கய்யா.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  இருக்கும் வரை தூங்கி விட்டு இப்போ போகும் போது அவசரகதியில் தீர்ப்பு சொல்லவேண்டிய அவசரம் என்ன? காலத்தின் கட்டாயமா இல்லை உடன்பாடா ?

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ஆமாம் போவதற்குள் கோதர கேஸ் லோயா கேஸ் இன்னும் அமைதி அமித்ஷா கேஸ் எல்லாம் முடித்துவிட்டு போங்கள் இல்லை என்றால் வருபவன் நேர்மையா இருந்த பண்டாரங்கள் கதி அதோ கதி தான்

 • M.Shanmugam - doha,கத்தார்

  He is a highly cursed man among sons men, a child of darkness

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து விட்டால்...வரவருக்கு சுமை இருக்காது

 • ஆப்பு -

  இத்தனை நாள் சும்மா உக்காந்துட்டு, அக்டோபர் 2 ந்தேதிக்குள்ள நாட்டுக்கு நல்ல காரியம் செஞ்சுட்டு போகப் போறாராக்கும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  தீர்ப்புகள் திருத்தப்படலாம் விற்கப்படலாம். எல்லாமே ஓய்வுக்கு பிறகு கிடைக்கப் போகும் பதவியை பொறுத்து.

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  போறப்ப மாண்புமிகு நீதிவேந்தர் குமாரசாமி வாழ்க என சொல்லிவிட்டுப் போங்கள் சார். ( யார் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் எங்களால் என்ன செய்யமுடியும்)

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  போவதற்குள் செட்டியாரை உள்ளே வைத்து விசாரிக்க ஆணை பிறப்பித்தால் நல்லது.. இல்லை என்றால் கீழ் நீதிமன்றங்கள் செட்டியாரை விசாரிக்க ஒருவருக்கும் உரிமை இல்லை என்று ஆணை பிறப்பித்து விடுவார்கள்...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  தீபக் மிஸ்ரா நீங்க போறதே போறிங்க , சொல்லவந்ததை சொல்லாம முக்கியமான சமயத்துல கூட மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மான்னு நீட்டி முழக்கி கழுத்தறுக்குறத தட பண்ணிட்டு போங்க

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  நல்ல தீர்ப்புகளை விரைவாக வழங்க வாழ்த்துக்கள் தீபக் மிஸ்ரா...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement