Advertisement

புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: கடந்த 2014-ம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


இந்நிலையில்புதிய தூய்மை திட்டத்தை மத்திய அரசு துவக்க திட்டமிட்டு உள்ளது. 'தூய்மையே உண்மையான சேவை' என்ற பெயரில் பிரதமர் மோடி வருகிற 15-ம் தேதி துவங்கி வைக்கிறார்.


இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-காந்தி பிறந்த 150-வது ஆண்டு விழா 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக வரும் 15-ம் தேதி தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் துவங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது தேசதந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Aarkay - Pondy,இந்தியா

  அய்யய்யோ இன்னுமொரு 1% அரசு ஊழியர் சம்பளத்திலிருந்து cess என்ற பெயரில், ஆட்டைய போடுவதற்கா மற்றொரு தூய்மை திட்டம்? நடைமுறைப்படுத்தப்படாத வெறும் அறிவிப்புகளால், எள்ளளவும் பயனில்லை. ஸ்வச் பாரத் இருக்கும்போதே, மாநில தலைநகர சாலைகள் நாறிக்கிடக்கின்றன.

 • Viswanathan - karaikudi,இந்தியா

  நாங்கள் , ஏற்கனவே , கூவம் சீரமைப்பு திட்டம் , விழி இழந்தோர்க்கு ஒளி வழங்கும் திட்டம் , விதவா மறுமண திட்டம் , பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் , இருபது அம்ச திட்டம் ஆகியவற்றை பார்த்து விட்டோம்

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது.

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  கடந்த 3 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருவாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்பட்டன. இப்போது தனது வரியை மத்திய அரசு குறைத்துக்கொண்டால் அதன் விளைவாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, கைவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  கலால் வரியில் ரூ.2 குறைத்தாலும்கூட அது மத்திய அரசின் வருவாயில் ரூ.28,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  பெட்ரோல் - டீசல் விலை இந்தளவு அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது இன்னொரு முக்கியமான காரணம். இவையிரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க முடியாது.

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  பெட்ரோல் டீஸல் விலை பத்திப் பேசி இன்னும் எத்தனை காலத்தை ஓட்டப் போறாங்கன்னு தெரியலை..... அது என்ன தினமும் சாப்பிடும் பொருளா.... அன்றாட உபயோகப் பொருட்கள் எத்தனை விலை குறைந்துள்ளது....அதில் வரும் மிச்சத்தை இதுக்கு கொஞ்சம் செலவு செய்யுங்களேன்...... மாநில அரசை விலை குறைக்கச் சொல்லிக் கேளுங்களேன்.... 4 மாநிலங்கள் குறைத்து முன்னுதாரணமாய் இருக்கின்றன... மாநில அரசுக்கு மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி ரூ 19 .80 ல் 42 % பங்கு கொடுக்கின்றது... அது போக மாநில அரசு வாட் வரியாக..... பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியில் தமிழக அரசுக்கு அதிக அளவாக பெட்ரோலுக்கு 22.76 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16.95 ரூபாயும் வரி வருவாயாக கிடைக்கிறது......இதை குறைக்கச் சொல்லி கேட்கலாமே.. ஸ்வச் பாரத் வந்தப்புறம்தான் பெண்கள் காட்டுப் பக்கம் ஒதுங்கும் அவஸ்தை குறைந்துள்ளது.... இது காட்டுமிராண்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..... எல்லாத்திலும் பிச்சை பொறுக்கும் அரசியல்வாதிகளையே பார்த்துப் பழகிய தமிழர்களுக்கு... நல்லது எதுன்னே தெரியாமப் போச்சி....

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  2019 தேர்தலோடு இந்த தூய்மைத்திட்டம் அமுலாகும் அன்று மோடி எங்கிருப்பார் என்பதையும் பார்ப்போம்.. அவனவன் எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது .. டாலரின் மதிப்பு மின்னல் வேகத்தில் இருக்கிறது என்றிருக்கையில் தூய இந்தியாவாம் அதுவும் திட்டமாம் .. 2019 வருடத்தில் பிஜேபி சுத்தமாக இந்தியாவிலிலிருந்து துடைத்தெறியப்படும் அதன் பிறகு தூய்மைக்கு திட்டம் வேண்டியதில்லை

 • suresh kumar - Salmiyah,குவைத்

  அடுத்து அக்டொபர் 3 ஆம் தேதி புத்தம் புதிய தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்படும்

 • நக்கல் -

  இந்தியாவில் இருக்கும் அழுக்கை அகற்றுவது அவ்வளவு சுலபமில்லை.. சுத்தம் செய்பவர்களை விட அசுத்தம் செய்பவர்கள் பல மடங்கு அதிகம்... உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. குறை சொல்பவர்கள் அதிகம்.. அவர்கள் இந்த நாட்டை விரும்பாதவர்கள், ISI, காம்முனிஸ்ட், காங்ரெஸ்,திமுக போன்ற தேச விரோத சக்திகளால் தூண்டப்படுபவர்கள்... சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு... சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...

 • Anandan - chennai,இந்தியா

  அப்போ ஸ்வச் பரத் ஊத்தி மூடியாச்சா?

 • tamil - coonoor,இந்தியா

  கத்தி போயி வாளு வந்துச்சி டும் டும் டும், ஸ்வச் பாரத் போயி தூய்மை சேவை வந்தது டும் டும் டும்

 • tamil - coonoor,இந்தியா

  ஸ்வச் பாரத், கோவிந்தா என்று நாம் தான் தெரிந்துகொள்ள வேண்டும், ஏன் தோல்வி என்று கேட்க கூடாது, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள், வித்தியாசமான ஆட்சி, வித்தியாசமான கட்சி,

 • மணிமாறன் - trichy,இந்தியா

  இதில் நல்ல வருமானம் இருக்கிறது.. இல்லை என்றால் மக்கள் விலை வாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதை பற்றியும் கவலைப் படாமல் ஏன் கூவப் போகிறார்..

 • Meenu - Chennai,இந்தியா

  தலைவரும் என்னென்னமோ திட்டத்தை அவிழ்த்து விட்றாரு, ஆனால் மக்கள் மத்தியில் எதுவுமே எடுபடலே, பாவம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாளொரு திட்டம் அனால் எதையும் நிறைவேற்றுவதில்லை... கண்ணை கட்டுதுப்பா...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு.

 • govin - ny,யூ.எஸ்.ஏ

  தூய்மை இந்தியா திட்டம் ஒவ்வொரு காந்தி பிறந்த நாளோடு முடிவுறக்கூடாது .அகில இந்தியா அளவில் வேஸ்ட் டிஸ்போசல் பாலிசி சட்டமாக்கவேண்டும் .குப்பை கழிவுகளால் அதிக அளவிலான பண விரயம் ஏற்படுகிறது.வேஸ்ட் recycling செய்தால் அதிக அளவிலான பணம் சேர்க்கலாம்.குப்பைகளை வகைப்படுத்தி வெவ்வேறு விதமாக மாற்று பொருளாக்க முடியும். உதாரணத்துக்கு காகிதம் ,பிளாஸ்டிக் ,உணவுக்கழிவுகள்,காய்கறி கழிவுகள் ,பழங்கள், மரக்கழிவுகள் ,கண்ணாடி கழிவுகள் ,தற்போது ஏற்படும் எலக்ட்ரானிக் கழிவுகள் அனைத்தும் பணம் கொழிக்கும் ரெபிராஸிங் தொழிலாக்கலாம் .மற்ற கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்த டம்ப் யார்டு ஏற்படுத்திட வேண்டும்.குப்பைகளை தெருவிலோ அல்லது ரோடு ஓரங்களிலோ வீசுவோர்களிடம் அதை அப்புறப்படுத்த கட்டணம் வசூலிக்க வேண்டும்.கட்டடம் கட்டுவோர்கள் தெருக்களிலோ அல்லது ரோடு ஓரங்களிலோ கொட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.அப்போதுதான் நாம் எதிர்பாக்கும் தூய்மை நமக்கு ஏற்படும் .அப்படியே கோயம்பேடு மார்க்கெட் பக்கம் போனால் குப்பையின் அவலம் தெரியும்.யாராவது கோயம்பேடு குப்பையை படம் பிடித்து போடுவீர்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement