Advertisement

மண்டபங்களில் ஆய்வு ரூ.40 ஆயிரம் அபராதம்

குன்னுார்:குன்னுாரில் திருமண மண்டபங்களில் 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், குன்னுார் தாசில்தார் தினேஷ் தலைமையில், ஆர்.ஐ., ஜெபசிங், வி.ஏ.ஓ., தீபக் மனோபாலா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், சரவணன் மற்றும் ஊழியர்கள், குன்னுாரில் உள்ள நான்கு திருமண மண்பங்களில் ஆய்வு செய்தனர். அதில், இரு மண்டபங்களில் 'பிளாஸ்டிக்' கப் மற்றும் தட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதில், செயின்ட் ஜான்ஸ் திருமண மண்டபம், விவேக்ஸ் திருமண மண்டபம் மேலாளர்களுக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த பொருட்கள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement