பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி
பந்தலுார்:பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பஸ்கள் நுழைவாயில் பகுதி சேதமடைந்தது.இதனால் பஸ்கள் உட்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து, கடந்த, 6ல் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனையடுத்து, நெல்லியாளம் நகராட்சி மூலம், 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சேதமடைந்த சிமென்ட் தளத்தை முழுமையாக அகற்றி, அதற்கு பதில் 'இன்டர்லாக்' கற்கள் பதிக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் தரமான முறையில், மேற்கொண்டால், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!