நோயாளிகள் வார்டில் குரங்குகள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், குரங்குகளின் தொல்லை தாங்க முடியாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு, தினமும், நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். சில நாட்களாக, உள்நோயாளிகள் வார்டுகளில், குரங்குகள் அலைகின்றன.உறவினர்கள், நோயாளிகளுக்கு தரும் பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவற்றை எடுத்து சாப்பிடுகின்றன. யாரேனும் துரத்த முயன்றால், அவர்களை கடிக்க வருகின்றன.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:ஜன்னல் வழியாக உள்ளே புகும் குரங்குகள், குடிநீர் வைத்துள்ள வாட்டர் கேன்களை கூட விட்டு வைப்பதில்லை.
சில
நோயாளிகள், குரங்குக்கு பயந்து படுக்கையை விட்டு அலறியடித்து ஓடும்
நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் சுற்றி திரியும்
குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க, வேண்டும். சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு, தினமும், நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். சில நாட்களாக, உள்நோயாளிகள் வார்டுகளில், குரங்குகள் அலைகின்றன.உறவினர்கள், நோயாளிகளுக்கு தரும் பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவற்றை எடுத்து சாப்பிடுகின்றன. யாரேனும் துரத்த முயன்றால், அவர்களை கடிக்க வருகின்றன.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:ஜன்னல் வழியாக உள்ளே புகும் குரங்குகள், குடிநீர் வைத்துள்ள வாட்டர் கேன்களை கூட விட்டு வைப்பதில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!