Advertisement

பழங்குடியினருக்கு உதவி பொருட்கள்

பந்தலுார்:பந்தலுார் அருகே, பிதர்காடு செருகுன்னு பழங்குடியின கிராமத்தில் நாகர்கோவிலை சேர்ந்த பழங்குடியினர் அறக்கட்டளை சார்பில், உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டேவிட்சன் தலைமை வகித்து, அரிசி, உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.நிர்வாகிகள் கூறுகையில், ' இந்த கிராமத்தில் படிக்கும், 40 மாணவர்களுக்கு புத்தக பை வழங்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு சென்று நன்றாக படித்து, பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றால், அவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்யப்படும். பெற்றோர் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம தலைவர் கருணாகரன், அறக்கட்டளை நிர்வாகி ஹார்பட்கிங்ஸ்லி, ஷாம்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement