Advertisement

வனத்துறை நர்சரியில் நாற்றுகள் தயார்

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் நடவு செய்ய ஏதுவாக, 'லாங்க்வுட்' சோலை நர்சரியில், 10 ஆயிரம் மரங்கள் தயார் நிலையில் உள்ளன.கோத்தகிரி நகர பகுதியில் அமைந்துள்ள லாங்க்வுட் சோலையில், ஒவ்வொரு ஆண்டும் சோலை மரநாற்றுகள் தயார் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு, சோலை நாற்றுகளான விக்கி, கோலி, நாவல், ஜகரண்டா மற்றும் பாட்டில் பிரஷ், சில்வர் ஓக் உள்ளிட்ட, 10 ஆயிரம் நாற்றுகள், நர்சரிகளில் வளர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.தற்போது, மழை பெய்துவரும் நிலையில், நிலங்கள் ஈரம் கண்டுள்ளதால், நாற்றுகளை நடவுசெய்ய ஏதுவான சூழல் நிலவுவதால், தேவையானவர்களுக்கு நாற்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 'இத்திட்டத்தில் பயனாளிகள் நாற்றுகள் பெற்று பயனடைய வேண்டும்,' என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.கோத்தகிரி ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,''தனியார் பட்டா நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தில், 10 ஆயிரம் நாற்றுகளும், 4,000 சோலை நாற்றுகளும் லாங்வுட் சோலையில் தயார் நிலையில் உள்ளன. நாற்றுகளுடன் பராமரிப்புக்கான தொகை வழங்கப்படுவதால், பயனாளிகள் பயன்பெற வேண்டும்.''மேலும், வனத்துறை சார்பில், வனவளத்தை மேம்படுத்தும் விதமாக, கோத்தகிரி பகுதியில், கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட, கோடநாடு காட்சிமுனை, ஜக்கனாரை மற்றும் குஞ்சப்பணை பகுதிகளில், சீகை உள்ளிட்ட அந்நிய நாட்டு மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சோலை நாற்றுகள் நடவு செய்யும் பணி நடந்துவருகிறது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement