Advertisement

கடையில் புகுந்து ரகளை காங்கிரஸ் பிரமுகர் கைது

திருநின்றவூர்:தனியார் பல்பொருள் அங்காடியை அடித்து நொறுக்கிய, காங்கிரஸ் கட்சி பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.


சென்னை, ஆவடி அடுத்த திருநின்றவூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர், விஸ்வநாதன், 53. முன்னாள் பேரூராட்சி தலைவரான இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.கடந்த, 10ம் தேதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில், நாடு முழுவதும், 'பந்த்' நடந்தது. திருநின்றவூர், காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், விஸ்வ
நாதன் பங்கேற்றார். அப்பகுதியில், பல வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன.


இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், திறந்திருந்த ஒரு பல்பொருள் அங்காடியை அடித்து நொறுக்கினார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கெண்ட விஸ்வநாதனை,
திருநின்றவூர் போலீசார் நேற்று, கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement