Advertisement

வாகன சோதனைக்கு உதவும் மோப்ப நாய்

கூடலுார்:முதுமலையில், வனச்சோதனை சாவடியில், வாகனங்களை சோதனை செய்யும் பணியில், மோப்ப நாய் 'ஆப்பர்' பயன்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில், வனக் குற்றங்களை தடுக்க, வனத்துறைக்கு உதவியாக, பயிற்சி பெற்ற மோப்ப நாய் ஆப்பர் உதவி வருகிறது.
தற்போது, முதுமலை வனத்துறைக்கு சொந்தமான மசினகுடி, தொரப்பள்ளி, கக்கனல்லா வனசோதனை சாவடிகளில், நடக்கும் வாகன சோதனையில் ஆப்பரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொரப்பள்ளி வனச் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது, பல வாகனங்களில் ஆப்பர் தனது மோப்ப பணியை சிறப்பாக மேற்கொண்டதால், அதிகாரிகள் திருப்தி அடைந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், ' இந்த மோப்பநாய், வனக் குற்றங்களை தடுக்க, வனத்துறைக்கு உதவியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், மசினகுடி வனப்பகுதியில் காணாமல் போன விவசாயி ஒருவரை கண்டு பிடித்து உயிருடன் மீட்க போலீசுக்கும் உதவியுள்ளது. தற்போது, வனக் குற்றங்களை தடுக்க, முதுமலை சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளிலும், வன எல்லைகளில் கண்காணிப்பு பணியில் வனத்துறைக்கு உதவியாக இதனை
ஈடுபடுத்தி வருகிறோம்,' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement