Advertisement

ரூ.6 லட்சம் சுருட்டிய போலி அரசு அதிகாரி

கோட்டூர்புரம்:வருமான வரித்துறை அதிகாரி போல் பேசி, வங்கி கணக்கில் இருந்து, 6 லட்சம் ரூபாய் சுருட்டிய மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


சைதாப்பேட்டை, சின்னமலையை சேர்ந்த ஹென்றி பிளாசிக் குமார், 50; தனியார், 'டிவி'யில் பணிபுரிகிறார். இவருக்கு, பெசன்ட் நகர், எச்.டி.எப்.சி., வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில், 'வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்' என, பேசிய நபர், வருமான வரி தொடர்பான சில தகவல்களை கேட்டுஉள்ளான்.


தொடர்ந்து, ஹென்றி மற்றும் அவரது மனைவி, மகள் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களையும் கேட்டுள்ளான். வருமான வரித்துறை அதிகாரி என நம்பி, வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விபரங்களையும், ஹென்றி கூறி உள்ளார்.


சில நிமிடத்தில், ஹென்றி மற்றும் மனைவி, மகள் வங்கி கணக்கில் இருந்து, 6 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வந்த, எஸ்.எம்.எஸ்., தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஹென்றி, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார், 'சைபர் கிரைம்' மூலம் விசாரிக்க முடிவு செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement