Advertisement

கேரளா வளர்ப்பு யானைகளுக்கு 'கும்கி' பயிற்சி நிறைவு

கூடலுார்:கேரள வனத்துறைக்கு சொந்தமான, மூன்று வளர்ப்பு யானைகளுக்கு, முதுமலையில் நடந்த மூன்று மாத 'கும்கி' பயிற்சி நிறைவு பெற்றது.கேரளா மாநிலம், வயநாடு முத்தங்கா வனச் சரணாலயம் வளர்ப்பு யானை சூரியன், 20; பந்தினம்திட்டா கோணி யானைகள் முகாம் வளர்ப்பு யானை சுரேந்திரன், 20; எர்ணாகுளம் கோடநாடு முகாம் வளர்ப்பு யானை நீலகண்டன், 22 ஆகிய வளர்ப்பு யானைகளுக்கு, ஜூன், 15 முதல், நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 'கும்கி' பயிற்சி வழங்கப்பட்டது.இதன் மூலம், இவைகள் யானை தள்ளுதல், யானை காலில் கட்டப்பட்ட சங்கிலியை மிதித்து, யானை நிறுத்துவது; காட்டு யானையை துரத்துவது மற்றும் பிடிக்க உதவுவது; விரைவாக தரையில் அமர்ந்து எழுதல்; கயிறு கட்டி யானையை இழுந்தல், மரம் இழுத்தல், சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் யானை சவாரி ஆகியவற்றுக்கு தயாராகி உள்ளன.மூன்று மாத பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. தொடர்ந்து, தெப்பகாட்டில், இன்று நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில், முதுமலை வளர்ப்பு யானைகளுடன், பங்கேற்க உள்ளன. பின்பு, கேரளாவுக்கு செல்கின்றன. வனத்துறையினர் கூறுகையில்,' இந்த பயிற்சி நல்ல முறையில் முடிந்ததால், மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement