Advertisement

பயனீர் கல்லூரியில் பாரதியார் நினைவு தினம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லுாரியில், பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.பாரதியாரின், 97வது நினைவு தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், பாரதியாரின் திருவுருவம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கல்லுாரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில்,''பாரதியால் தமிழும், பெண்களும் உயர்வடைந்தனர். அவரது கவிதைகளை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும்,'' என்றார்.என்.ஜி.பி., கலை, அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் பகவதியம்மாள், 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் பேசினார். கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு, இசைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆஷா நன்றி கூறினார். பேராசிரியர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement