Advertisement

மரக்கன்று நடும் விழா

சூலுார்:கண்ணம்பாளையம் ஆர்.வி.எஸ்., டெக்னிக்கல் கேம்பஸ் கல்லுாரியில், மரக்கன்று நடும் விழா நடந்தது.இயக்குனர் ராபின்சன், ரோட்டரி கிளப் நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர்கள் பிரியா வைஷ்ணவி, சுரேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த தானம் செய்வோரின் உடல்நிலையை பரிசோதித்தனர். மாணவ, மாணவியரிடம் இருந்து, 105 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.'ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் சென்டினியல்' நிர்வாகி வரதராஜன், மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். சாமிநாதன், ராமநாதன் மற்றும் என்.எஸ்.எஸ்., ரெட் கிராஸ் அமைப்பு, சூலுார் கிரேட்டர் லயன்ஸ் கிளப், பசுமை நிழல் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement