Advertisement

கொள்ளிடத்தில் கதவணை: தொழில்நுட்ப குழு ஆய்வு துவக்கம்

திருச்சி : கொள்ளிடம் ஆற்றில், புதிய கதவணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் துவங்கி உள்ளன. திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட பழமையான அணையின், ஒன்பது மதகுகள், ஆக., 22ல் இடிந்து விழுந்தன. இதை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, 'பழைய அணையில் இருந்து, 100 மீட்டரில், 410 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டப்படும்' என்றார்.கொள்ளிடம் ஆற்றில், புதிய கதவணை கட்டுவதற்கான ஆலோசனைகள் வழங்க, தனியார் நிறுவனத்தின் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், இடிந்து விழுந்த அணைப் பகுதியிலும், அதற்கு வடக்கு பகுதியில் உள்ள, 10 மதகுகள் கொண்ட சிறிய அணைப் பகுதியிலும், முதல் கட்ட ஆய்வுப் பணியை துவக்கி உள்ளனர்.'மண்ணின் உறுதி தன்மை, நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றை கண்டறிந்து, அதற்கேற்ப, புதிய அணைக்கான வரைபடம் தயாரிக்கப்படும்' என, ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement