Advertisement

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

அன்னுார்:அல்லிக்காரம்பாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
அல்லிக்காரம்பாளையம் சித்தி விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில், புதிதாக கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோபுரம் கட்டப்பட்டுள்ளது. பல லட்சம்
ரூபாயில், திருப்பணி செய்யப்பட்டது.
கடந்த, 10ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று காலை, 10:45 மணிக்கு, விநாயகர், காமாட்சியம்மன் மற்றும் கோபுரங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. அவிநாசி வாகீசர் மடம் காமாட்சிதாச சுவாமிகள், ததேவானந்த சுவாமிகள் அருளுரை வழங்கினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement