Advertisement

2 ஆண்டாக தாலிக்கு தங்கம் இல்லை: 50 ஆயிரம் பேர் தவிப்பு

சிவகங்கை: இரண்டு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி, தங்கம் வழங்காததால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவிக்கின்றனர்.சமூகநலத்துறை மூலம் திருமணமகாத ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி, தங்கம் வழங்கப்படுகின்றன. இதில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் 8 கிராம் தங்கம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில் 2016 டிச., 31 க்கு பின் திருமணமான பெண்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக வழங்காததால், மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். அவர்கள் தினமும் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அலைகின்றனர்.சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தங்கம் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கொள்முதல் செய்யப்பட்டு, பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. விரைவில் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்படும்,' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement