Advertisement

பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் : இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை தீர்த்தவாரி நடக்கிறது.இக்கோயிலில் சதுர்த்தி விழா செப்.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு நேற்று காலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து வடம் பிடித்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் இரவு வரை தரிசித்தனர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் திருக்குளத்தில் காலை 10:00 மணிக்கு உற்ஸவ விநாயகர் எழுந்தருளலும், அங்குசத்தேவருக்கு அபிேஷக, ஆராதனைகளுடன் தீர்த்தவாரியும் நடக்கிறது.மதியம் 2:00 மணிக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும், இரவில் ஐம்பெரும் சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement