சென்னை - சேலம் இடையே, 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக, இச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலம், கல்வராயன் மலைப் பகுதியில், 13.29 கி.மீ., துாரத்துக்கு, 90 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, இது, 9 கி.மீட்டரா கவும்; 70 மீட்டர் அகலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
வனப் பகுதியில், 111 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது. எதிர்ப்புக்கு பணிந்து, சாலை திட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிரசாரம் செய்யப்படுகிறது; இது தவறானது. வனத்துறையின் கோரிக்கையை ஏற்று, வனப் பகுதியில் மட்டுமே, மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இச்சாலை பணியை, ஆறு கட்டங்களாக முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தில், சாதகமாக தீர்ப்பை பெற்று, விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
INSTEAD OF MAKING END TO END ROAD ( TO AND FRO FROM SALEM ) AS THERE IS NO VILLAGES IN BETWEEN TO GET BENEFIT FROM THIS ROAD , , CONSIDER EXTENSION OF EXISTING ROAD FOR BETTER ADVANTAGES FROM THE HISTORY OF ROAD