Advertisement

சுகாதார அதிகாரிநியமனம் எப்போது?

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலத்தில், காலியாக உள்ள சுகாதார அதிகாரி பணியிடத்தை, விரைந்து நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்கத்திற்கு முன், ஊராட்சி, பேரூராட்சியாக இருந்தவை. எந்த வார்டிலும், கழிவுநீர் இணைப்பு வசதி இல்லை.மண்டல சுகாதார அதிகாரி பணியிடம், எட்டு மாதங்களாக காலியாக உள்ளது. அடையாறு மண்டல சுகாதார அதிகாரி, கூடுதல் பொறுப்பாக, கவனித்து வருகிறார்.


சுகாதார அதிகாரி புனிதாவை, 20 நாட்களுக்கு முன், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு, மாநகராட்சி நியமித்தது. ஆனால், அவர் தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலத்திற்கு, விருப்ப பணியாக கேட்டதாகவும், சோழிங்கநல்லுார் மண்டலத்தை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால், பணியில் சேரவில்லை. சுகாதார பணியை தீவிரப்படுத்த, மண்டல சுகாதார அதிகாரி பணியிடத்தை, விரைந்து நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement