Advertisement

அழகிரிக்கு எதிராக அவரது தங்கை; திருவாரூரில் களமிறக்க திட்டம்

திருவாரூர் இடைத்தேர்தலில், அழகிரி போட்டியிட்டால், அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அழகிரியின் தங்கையர் செல்வி, கனிமொழி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்து, அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த கருணாநிதியின், சொந்த தொகுதியான திருவாரூரில், தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தயாராகி வருகிறார். வரும், 15ல், அண்ணா துரை பிறந்த நாளை ஒட்டி, விழுப்புரத்தில், தி.மு.க., முப்பெரும் விழா நடக்கிறது. அதுவரை அமைதியாக இருந்து விட்டு, விழா முடிந்ததும், திருக்குவளையில், தன் சுற்றுப்பயணத்தை துவக்க, அழகிரி திட்டமிட்டுள்ளார்.

திருவாரூர் தொகுதியில், அழகிரி போட்டியிடுவது உறுதி ஆகி விட்டால், அவரை வீழ்த்துவதற்கு, அவரது சகோதரியை, தி.மு.க., வேட்பாளராக களமிறக்க வேண்டும் என, ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி போட்டியிட்ட, சென்னை - சேப்பாக்கம், திருவாரூர் தொகுதிகளில், தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம், செல்விக்கு உண்டு.

செல்வி போட்டியிட விரும்பவில்லை என்றால், கனிமொழியை நிறுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜ்ய சபா, எம்.பி., பதவி காலம், அடுத்த ஆண்டு முடிகிறது. அடுத்த ஆண்டு, மே மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட, கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நடக்கவுள்ள இடைத்தேர்தலில், கட்சி வெற்றி பெற்றால் தான், அவரது எதிர்கால அரசியல் பயணமும் வெற்றி பெறும். எனவே, வெற்றி வியூகம் அமைத்து, தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. அழகிரியை வீழ்த்த, எந்த நிலைக்கு இறங்கவும், ஸ்டாலின் தயாராக இருக்கிறார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

நாலாவது இடம்! கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., இடையிலான, மும்முனை போட்டியில், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளருக்கு, 20 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. அதுவே, 2016 சட்டசபை தேர்தலில், இருமுனைப் போட்டி நிலவியதில், தி.மு.க.,வுக்கு, 40 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. இந்த தேர்தலில், கூடுதலாக கிடைத்த, 20 சதவீதம் ஓட்டுக்கள், எந்தெந்த ஜாதியினர் என்ற புள்ளி விபரத்தை, அழகிரி மகன் தயாநிதியின், 'சர்வே டீம்' ஆராய்ந்து வருகிறது. இந்த தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., தினகரன், அழகிரி என, நான்கு முனைப் போட்டி ஏற்படும்போது, தன் அணி சார்பில், இந்த தொகுதியில், ஜாதி அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தி, தி.மு.க.,வை நான்காம் இடத்திற்கு தள்ள, அழகிரி வியூகம் அமைத்துள்ளார்.
- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (68)

 • Achchu - Chennai,இந்தியா

  ஜெயிப்பவர் முதல்வராகலாமோ?

 • bal - chennai,இந்தியா

  யார் வந்தால் என்ன....ரெண்டுமே ஒரே குட்டை...தினகரன் MLA ஆகி என்ன கிழித்தார்...எப்படா தேர்தல் வரும்.....

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  DMK Party has become the battleground for Karunanidhi's family. The family members are washing their dirty linens in public. DMK-Is it a party for the people welfare or for gains to the family. The Tamilnadu people are mesmerised with Tamil and Dravidian culture by the DMK. When DMK Party leaders are not able to unite their own family how do we expect they can unitedly work for the welfare of the people. Oh People of Tamilnadu please be beware of DMK party and exercise your franchise judiciously in next election to be free from the clutches of DMK Party. It may not be long when we hear that Dayalu,Rajathi Ammals and Udayanidhi will stand in election.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  70களில் தோ்தல் பிரச்சார மேடைகளில் காங்கிரஸ்காரா்கள் தவறாமல் இந்த பிரச்சார வாசகத்தை சொல்லி வாக்கு சேகரிப்பார்கள். அந்த வாசகம் " மு.க முத்து நடித்தது பிள்ளையோ பிள்ளை அவன் அப்பன் மு.கருணாநிதி அடித்ததோ கொள்ளையோ கொள்ளை" திமுக தமிழா்கள் துயரம்.... திமுக இல்லாத தமிழகமே மக்கள் எண்ணம்...

 • கேசவன் கிடாமங்கலம்.. - karaikkal,இந்தியா

  கட்சிக்காக இத்தனை வருசமா உழைக்கிறார் திருவாரூர் மாவட்ட செயலாளர் அவருக்கு சீட் கொடுங்கய்யா மக்கள் செல்வாக்கும் அதிகம் அவருக்கு

 • Senthil - Chennai,இந்தியா

  Alagiri may get scope

 • R.SUBRAMANIAN -

  ஏன்,திருமதி தயாளூ அம்மாள் பெயரை பரிசீலனை செய்யலாமே.வெற்றிநிச்சயம்.சட்டசபை வளாகத்தில் பதிவேட்டில் கையொப்பம் இட்டால் போதுமானது.

 • ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா

  திருவாரூரில் அழகிரி நின்றால், கட்சியில் உள்ள வலுவான அரசியல் வேட்பாளர்களை நிறுத்துவதை விட்டுவிட்டு குடும்ப நபர்களை நிறுத்தினால் ஸ்டாலின் எதிர்காலம் அஸ்தமனம்தான். எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் போது குடும்ப நபர்களை நிறுத்தினால், அதுவே பிரச்சனையாக அமையும். 1989 தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்க்க சினிமா நடிகையை நிறுத்துகிறேன் பேர்வழி என்று வெண்ணிற ஆடை நிர்மலா வை ஆர். எம். வீரப்பன் நிறுத்தி, தோல்வியடைந்து அரசியல் அனாதை ஆகிவிட்டார். அதே நிலை ஸ்டாலினுக்கும் ஏற்படலாம். அது தமிழ்நாட்டிற்கு நல்லதும் கூட

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  If this happens, it will be proved that tamilnadu constituencies are zone wise divided within MK. Its upto dmk cadres in particular and people in general to decide whether they accept dmk

 • mindum vasantham - madurai,இந்தியா

  rk nagaril திமுக வோட்டு தினகரனுக்கு கை மாறியது , அதிமுக வோட்டு அழகிரிக்கு மாறினால் திமுக ambel thaan

 • karutthu - nainital,இந்தியா

  தி மு க ஒரு ஜனநாயக கட்சியா அல்லது கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான கட்சியா ???கலைஞர் மகள்களை / மகன்களை விட்டால் வேறு யாரும் கட்சியில் இல்லையா . கழக தலைவர்கள் கொஞ்சம் யோஜிக்க வேண்டும் தொண்டர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை ஒரு நல்ல அரசியல் வாதியாக உருவாக்குங்கள் .

 • Thiyagarajan - Bangalore,இந்தியா

  அப்பன் செய்த தவறுகள், இவர்கள் அடித்துக்கொண்டு சாக போகிறார்கள்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஆகமொத்தம் கட்சிக்காரன் எவனு(ளு)க்கும் சான்ஸே இல்ல .... அதான் இருநூத்திமுப்பத்திநாலு தொகுதிக்கும் நிறுத்துற அளவுக்கு வீட்டுக்குள்ளையே இருக்கே

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இந்தியாவையே

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  தி.மு.க விற்கு முட்டுக் கொடுக்க ஆள் வந்தாச்சு

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  தான் எப்படியாவது பதவிக்கு வந்து குடும்பத்தை காப்பாற்ற தேர்தல் நேரத்தில் பல கட்சிகளை உடைத்தார். ஆனால் இன்று இடைத்தேர்தலால் தனது குடும்பமே உடைகிறது. பாவம் பார்க்கத்தான் தீய சக்தி உயிருடன் இல்லை

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், வாரிசு அரசியல் இந்த தேசத்தை பிடித்த தொழுநோய். மாஃபியா கேங்கை விட ஆபத்தானது. அப்பன் பதவிக்கு வந்துவிட்டால் வாரிசுகளுக்கு பதவி அரிப்பெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. தகுதியே இல்லாத தற்குறிகள் எல்லாம் தலைமை பதவிக்கு சுலபமாக வந்துவிடுகிறது. இந்த பச்சை அயோக்கியத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். வாரிசு அரசியலால் மகன், மகள், மருமகன்,மருமகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி வரை நோகாமல் நொங்கு தின்ன ஆசைப்படுகிறது. இதுல மொதோ பொண்டாட்டிக்கு பொறந்தது, ரெண்டாவது மூணாவது பொண்டாட்டிக்கு பொறந்தது, வப்பாட்டி, எடுப்பு தொடுப்புகளுக்கு பொறந்ததெல்லாம் பதவிகளை அனுபவிக்க துடிக்கிறது நேரு குடும்பம் தொடங்கிவைத்த இந்த அரசியல் அயோக்கியத்தனம் நாடு முழுக்க பரவி காஷ்மீரில் பரூக் அப்துல்லா குடும்பம், பஞ்சாபில் பரகாஷ்சிங் பாதல் குடும்பம், உபியில் முலாயம்சிங் யாதவ் குடும்பம், பிஹாரில் லல்லுபிரசாத யாதவ் குடும்பம், ஒரிசாவில் பட்நாயக் குடும்பம், ஆந்திராவில் என்டிஆர் குடும்பம், மஹாராஷ்டிராவில் பால்தாக்கரே குடும்பம், கர்நாடகாவில் தேவகவுடா குடும்பம், தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பம் என்று இந்தியாவையே செல்லரித்துவிட்டது. இனி மக்கள் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியானாலும் வாரிசு அரசியலுக்கு ஆப்பு வேண்டும். தலைதூக்க விடக்கூடாது. ஒழித்துக்கட்டவேண்டும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சூப்பரப்பு...இப்படி தான் இருக்கோணும்......கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. .ஆனா...இதென்னடா...திருவாரூர் என்னமோ கருணாநிதி சொத்து மாதிரி....திமுக வுல போட்டி போட அந்தாளு குடும்பத்தை தவிர வேற ஆளே கிடைக்கலையா..?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //கட்சி வட்டாரங்கள் கூறின.// ஓடி வாங்க ஓடி வாங்க. அறிவுரை, ஆலோசனை, சாபம், ஜோசியம் எல்லாம் எழுத ஒரு பொன்னான வாய்ப்பு, ஒரு கட்டுரை அதுவும் அழகிரி பத்தி வந்திருக்கு..

 • IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா

  வெற்றி திமு க வுக்கே...

 • Rama Rajan - Chennai ,இந்தியா

  ஏன்?? சுடலையோ அவர் மகன் உதயநிதியோ நிற்கவேண்டியது தானே??// ஓவ்ரங்கசிப் அரசியல் நடந்துகொண்டு இருக்கிறது .

 • astromaniam - Trichy,இந்தியா

  பிள்ளையோ பிள்ளை அந்த கால கூவல். தங்கையோ தங்கை இந்த கால கூவல்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  """"நாங்களும் கட்சியில் இருக்கிறோமே ...... நாங்களும் தொகுதியில் செல்வாக்குப் பெற்றிருக்கிறோமே ...... நாங்கள் அந்தத் தொகுதியில் நிற்கக் கூடாதா """" என்று உள்ளூரில் செல்வாக்குப் பெற்ற கழகக் கண்மணிகள் கேட்கமாட்டார்களா ???? ....... ஏன் ????

 • R.CHELLAPPA - Vadodara,இந்தியா

  இரண்டு பேரில் யார் வெற்றி பெற்றாலும் familyகு தோல்வியல்ல.

 • SaiBaba - Chennai,இந்தியா

  கட்சிக்குள் நிறைய போட்டிகள் உருவாவதை ஸ்டாலின் விரும்ப மாட்டார். தற்போது செல்வியை நிறுத்தும் பட்சத்தில் அவரும் இன்னொரு கனிமொழி, அழகிரியாக உருவானால் ஸ்டாலினுக்கு தலைவலி தான். தம்பிக்காக தியாகம் செய்யக்கூடிய தியாகப்பரம்பரை அல்ல இவர்கள். ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வை இல்லாதவராகத் தெரிகிறாரே, இவரையா முதல்வராக தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் மக்களே.

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  தவறான முடிவு. கனிமொழி அல்லது செல்வி யார் நின்றாலும் அழகிரி ஜெயிப்பது நிச்சயம் ஏனென்றால் அழகிரி அவர்கள் இன்றும் மக்களோடு மக்களாக பழகுகிறார், அவரால் கோர்வையாக பேச முடியாது தவிர அன்பால் இன்றும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார். இது தான் உண்மை. இங்கு மக்கள் தான் ஆசான் கட்சிகள் அல்ல.

 • அருணா -

  நல்லதொரு குடும்பம் நாட்டிற்கே எடுத்துக்காட்டு....மகிழ்ச்சி. விரைவில் தமிழகம் குடும்பத்திற்குள் அடைக்கப்படும்.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  கலைஞரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மாவட்ட செயலாளர் கலைவாணனையே நிறுத்தவேண்டும்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு தொக்கு தன் கையே கண்ணில் குத்தும் தன் வினை தன்னை சுடும் காண மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக நினைத்து ஆடியது போல ... ஆக அழகிரிக்கு சரியான பாடம் புகட்டுதல் இருக்கும் அதன்பின்தான் அடங்கி வாழவழிவகை பிறக்கும்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஸ்டாலின் திட்டம் அருமை. தன்னை எதிக்கும் அழகிரி வாய்ப்பு கிடைக்காமல் உள்ள கனிமொழி ஆகியோரை வீழ்த்தி தனக்கு போட்டியே இல்லாமல் செய்வார்கள். அதிகபட்சம் இழப்பது டெபாசிட் தொகை மட்டுமே ஆனால் கிடைப்பதோ குடும்ப குடைச்சல் இல்லாத தலைவர் பதவி

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  தலைவர் மனைவி தயாளுவை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் . அழகிரியும் போட்டிக்கு யாரையும் நிறுத்த மாட்டார். வெற்றி பெற்று தலைவரும் சட்டசபைக்கு போகாமல் தொகுதிக்கும் போகாமல் வீட்டில் தான் இருந்தார்.

 • INNER VOICE - MUMBAI,இந்தியா

  Good idea. Whoever wins accumulated wealth will not go to others.

 • நக்கல் -

  தலீவர் பண்ண பாவம் கொஞ்சமா... குடும்பம் அடிச்சின்னு சாவ வேண்டியதுதான்.. அதுதான் நாட்டுக்கு நல்லது... பண பதவி வெறி பிடித்தவர்கள் அழியட்டும்..

 • tamil - coonoor,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி,

 • Shanu - Mumbai ,இந்தியா

  Stalin should change. Accept algieri in DMK party

 • கண்ணோட்டம் -

  அஞ்சாநெஞ்சன் மதுரையில் நின்றாலே ஜெயிக்க முடியாது! தெரியுமோ? திருப்பரங்குன்றத்தில் கூட ஓட்டைத்தான் பிரிக்க முடியும். ஜெயிக்க முடியாது! அதனால் தான் அனுதாப ஓட்டை எண்ணி திருவாரூருக்கு வருகிறார்! ஆக திமுகவும் சரியான கலைஞரின் வாரிசு ஒருவரை நிறுத்துவதுதான் ஜெயிப்பதற்கு வழி! செல்வி என்றால் தேர்தல் செமையா இருக்கும்!

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கொடுத்தால் தங்கை.. யார் கொடுத்ததோ...? அழகிரியா ? ஸ்டாலினா ?

 • K.BALASUBRAMANIAN - hosur,இந்தியா

  பதவி வெறி தனது அண்ணனையே காலை வாரிவிடும் நிலைமைக்கு சென்றுள்ளார் ஸ்டாலின் . அநியாயம்

 • Rajan - chennai,இந்தியா

  மானம் கெட்ட தமிழர்கள்... அவர்களுக்கே ஓட்டுபோடுவார்கள்... அடிமைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கலைஞரின் பிரதிநிதியாக செல்வி தான் திருவாரூர் தொகுதியை கவனித்துக் கொண்டார். இப்போது அவரே நின்று ஜெயிப்பது தான் சரியாக இருக்கும். இதில் அழகிரி பூச்சாண்டிக்கெல்லாம் வேலையில்லை.

 • ravisankar K - chennai,இந்தியா

  குடும்ப சண்டை , இதில் மக்கள் முட்டாள்கள் . இவர்களுக்கெல்லாம் காசு வாங்கி வோட்டு போடும், மானம் மரியாதை இல்லாத , திராவிடம் வளர்த்த தன்மான டாஸ்மாக் தமிழர்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அழகிரிக்கு எதிராக திமுக யாரை நிறுத்தினாலும் அந்த வேட்பாளர் கடைசி நிமிடத்தில் வாபஸ் வாங்கி விடுவார்.....

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயா பிச்சை போடுங்கய்யா இடைதேர்தல்லே ஒரு வேட்பாளரை பிச்சை போடுங்கய்யா ,ஆமா திமுக விலே அழகிரியை எதிர்த்து நிற்க ஒரு திமுகக்காரனுக்கும் திராணி இல்லையா?

 • samkey - tanjore,இந்தியா

  ஆக மறுபடியும் குடும்ப உறுப்பினர். வாலுவும் பழனியும் முண்டா தட்டிக்கொண்டு நிற்காமல் போய் போஸ்டர் ஓட்டுற வேலைய பாருங்க..

 • சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்

  திருப்பரங்குன்றத்தில் அதிமுக-திமுக - பாஜக இடையிலான போட்டி என்று கட்டம் போட்டு செய்தி எழுதி இருக்கிறீர்களே...போட்டியிட்டது மதிமுக.. வேட்பாளர் மதிமுக பொது செயலாளர் வைகோ...பிஜேபி கூட்டணி என்று எழுதி இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முதல்வர் பதவி வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் சுடலை அங்கு போட்டியிடலாமே... 'கலைஞர் கருணாநிதி திமுக' என்ற பெயர் அதிகமாக விலை போகும் என்றுதான் நினைக்கிறேன்...

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இந்த கொள்ளைகார கட்சியை அழித்தால் தான் தமிழகம் வளம் பெரும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஏன்?? சுடலையோ அவர் மகன் உதயநிதியோ நிற்கவேண்டியது தானே??

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  கொள்ளை அடித்த துட்டை பங்கு போட்டு கொள்ள குடும்ப சண்டை.

 • karupanasamy - chennai,இந்தியா

  ஹிப்பிப் ,ஹுர்ரே: ஹிப்பிப் ,ஹுர்ரே: ஹிப்பிப் ஹுர்ரே. உதயகுமார் தொட்டு சாதிக் பாஷா மற்றும் மதுரை பத்திரிக்கை அலுவலகத்தில் கொல்லப்பட்ட அணைத்து ஆன்மாக்களும் ஆனந்தமடையட்டும் விரைவாக அடித்துக்கொண்டு சாகுங்கள்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அழகிரியை எதிர்க்க தீபா புருஷன் மாதவன்தான் சரியான கேண்டிடேட்

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  ஊடகங்களின் யூகங்களே ஓழிய, இதை இம்மியளவும் யாரும் நம்பவேண்டாம். செல்வி எப்போதும் அழகிரியின் பேச்சை கேட்பவர். அவருக்காக போராடியவர். அவரை தன் பக்கம் இழுக்க இது ஒரு சதி. வெற்றிபெறாதைய்யா வெற்றிபெறாது. .

 • s t rajan - chennai,இந்தியா

  கர தூஷணன்.... சூர்ப்பனகைக்குள்ள.... போட்டியா...... மக்களே..... மூணையும் அடித்து ஓட்டுங்க... நாட்டு நலன் கருதி.

 • Rajagopal Sudarsanam - Chennai,இந்தியா

  திருட்டு முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக திராவிட ஒழிப்பு கட்சி தான், தயவு செய்து யாரும் தப்பு சொல்லாதீங்க...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கலைஞர் குடும்பத்தை விட்டால், திமுகவில் வேறு யாரும் இல்லையா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement