Advertisement

மாவட்ட கேரம் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை:தமிழ்நாடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி, 27ம் தேதி நடக்கிறது.


மழலை வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.ஒற்றையர் மற்றும் இரட்டையர் என, இரு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர், மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.மேலும், போட்டியில்
பங்கேற்க, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், 24ம் தேதிக்குள், மாணவர்கள் பதிவு
செய்ய வேண்டும்.


பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட வயது சான்றிதழுடன், போட்டி நாளன்று, காலை, 8:00 மணிக்குள், மாணவர்கள் ஆஜராக வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement