Advertisement

நடைபாதையில் கொட்டப்பட்ட வீராங்கல் ஓடை கழிவுகளால் அவதி

ஆலந்துார்:வீராங்கல் ஓடையில் துார்வாரப்பட்ட கழிவுகளை, வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலை நடைபாதையில் கொட்டியதால், நடைபயிற்சி செய்யும் ஆயிரக்கணக்கானோர் அவதியடைந்து வருகின்றனர்.


ஆதம்பாக்கம் ஏரியில் சேகரமாகும் உபரிநீர், கலங்கல், வீராங்கல் ஓடை வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை அடைந்து, கடலில் கலக்கிறது. வீராங்கல் ஓடையின் வழித்தடம், 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் வெளியேற வழியில்லாமல், குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதி குடியிருப்புகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.
இதற்கு தீர்வு காணும் வகையில், உள்வட்ட சாலையோர நிலம் கையகப்படுத்தப்பட்டு, 30 கோடி ரூபாய் செலவில், வீராங்கல் ஓடை புனரமைக்கப்பட்டது.


ஆனால், மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து புழுதிவாக்கம் வரை உள்ள வீராங்கல் ஓடை, கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் ஓடை, ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சிக்கி, தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது.


ஓடை கழிவுகளை அகற்ற, பொதுப்பணித் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பருவமழை துவங்க உள்ள நிலையில், மேடவாக்கம் - புழுதிவாக்கம் வீராங்கல் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என, இப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


இது குறித்து, சமீபத்தில் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த வாரத்தில், வீராங்கல் ஓடை துார்வாரப்பட்டது.துார்வாரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஓடையில் இருந்த கழிவு களை அகற்றி, வேளச்சேரி - மவுன்ட் உள்வட்ட சாலை நடைபாதையில் கொட்டி நாசப்படுத்தி உள்ளனர்.


நடைபயிற்சி மேற்கொள்வோர், நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதி
காரிகள், நடைபாதையில் உள்ள கழிவுகளை, முழுமையாக விரைந்து அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement