Advertisement

பழனிசாமி முறைகேடு வழக்கு; போலீசுக்கு ஐகோர்ட், 'கெடு!'

சென்னை : தமிழக நெடுஞ்சாலைத் துறை பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தி.மு.க., அளித்த புகார் மீதான விசாரணை அறிக்கையை, 17ம் தேதி தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தி.மு.க., அமைப்புச் செயலரும் ராஜ்யசபா, எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி வசம் நெடுஞ்சாலை துறை உள்ளது. ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டம், திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழி சாலை திட்ட ஒப்பந்தப் பணிகள், முதல்வர் பழனிசாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.


மதுரை ரிங் ரோடு, வண்டலுார் - வாலாஜாபாத் ஆறு வழி சாலை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, முதல்வரின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இவ்வாறு 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மூலம் வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகத்தை, முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இது தொடர்பாக, ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு அதன் வரைவு அறிக்கை 'விஜிலன்ஸ்' ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.


இதற்கிடையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் 'முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை வருகிறது.
பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதனால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அந்த விசாரணையை, நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.


இவ்வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''நான்கு வழி சாலைக்காக 1 கி.மீ., துாரத்துக்கு, 21.50 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது; அதிகபட்சம், 10 கோடி ரூபாய் தான் செலவாகும். முதல்வரின் உறவினர் என்பதால், தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன'' என்றார்.


உடனே அட்வகேட் ஜெனரல் '2014ல் தான் அந்த ஒப்பந்ததாரரின் சம்பந்தியாக முதல்வர் ஆனார். இந்த திருமணத்தால், அவருக்கு ஒப்பந்தம் கிடைக்க தகுதியில்லை எனக் கூற முடியாது. சாலை ஒப்பந்தப் பணிகளில் அந்த நிறுவனம், 1991ல் இருந்து ஈடுபடுகிறது. டெண்டர் மதிப்பை அதிகரித்ததாக கூறுவதும் சரியல்ல. ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.


அதற்கு நீதிபதி, 'புகாரில் குற்றம் புலப்படவில்லை என்கிற முடிவுக்கு அதிகாரிகள் வந்து விட்டனரா' என, கேள்வி எழுப்பினார். உடனே அட்வகேட் ஜெனரல் 'விசாரணையை அறிக்கை விஜிலன்ஸ் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை, ஆணையர் நிராகரிக்கலாம் அல்லது மேற்கொண்டு விசாரணையை தொடரவும் உத்தரவிடலாம்' என்றார்.


இதையடுத்து மனுதாரர் அளித்த புகாரின் மீது தினசரி நடந்த விசாரணை விபரங்கள் அடங்கிய அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்யும்படி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும் புகார் கொடுத்தவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்பதை விளக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  லஞ்ச ஒழிப்பு துறையா எங்கே இருக்கு ? நெடுஞ்சாலை துறை வேலை செய்ததா ? எங்கே ?எப்போது ? கல்லா கட்டுறதற்கே நேரம் இல்லை, புகார் கொடுத்து இரண்டு வருடம் தானே ஆயிருக்கு , பார்க்கலாம்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சபரி அவர்களை இப்பவே கண்ணகட்டுதே என கருணாநிதி நினைத்திருந்தால் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடியுமா? அதில் ஒன்றை மறந்துவிட்டீர்கள் காரியம் என்றால் காலில் விழு, காரியம் முடிந்தால் காலைவாரி விடு என்பது தலைவர் பதவிக்காக எம்.ஜி.ஆர் காலில் விழுந்துகிடந்தது கிடைத்ததும் அவரையே நீக்கியது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இதுக்கு தான் கருணாநிதி முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களை நண்பர்களாக்கி ஊழல்கள் செய்துவந்தார். நீங்கள் முதல்வராக இருக்கலாம் ஆனால் கருணாநிதி போல் சிக்காமல் செய்யமுடியாது எடப்பாடி அவர்களே. ஏன்னா அவர் மகன் ஸ்டாலின் கூட இப்படி ஊழல்கள் செய்வது சற்று கடினம்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இங்கே பொருமுபவர்கள் முடிந்தால் முதலமைச்சர் குடும்பத்துடனோ அல்லது அமைச்சர்கள் குடும்பத்துடனோ சம்பந்தம் வைக்க முயற்சி செய்யுங்கள் ... எல்லா கான்டராக்ட்டும் உங்களை தேடி வரும் ... பண மழையில் நனையலாம்..

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  மீண்டும் திருட்டு பட்டம் சுமக்கும் திமுக தொடர்ந்த வழக்கில் உத்தம அதிமுக முதல்வர் சிக்கினார் அனால் திமுக மட்டும் திருட்டு கழகம் ஏனெனில் அது இந்துத்துவாவை எதிர்க்கிறது

 • tamil - coonoor,இந்தியா

  ஒரு அமைச்சர், அவரோட வீட்டிலேயே சி.பி.ஐ., சோதனை போட்டு கேவலப்படுத்தி விட்டது, ஆனால் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, அவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து விலகமுடியுமா, அது தரும் சுகம் அப்படி, எந்த ஒரு உத்தரவும், சோதனையும் யாரையும் ஒன்றும் செய்யாது, அது மத்திய அரசின் விருப்பத்தை பொறுத்தது

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  பெரும்பாலான அமைச்சர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது..இப்படியே போனால் ..ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் களை பதவியிலிருந்து நீக்க வேண்டியிருக்குமோ..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பழனிசாமி கதாநாயகனா நடிக்கும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம்... குறைந்தது இருபது ஆண்டுகள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...வில்லன் பாரதியின் நடிப்பு மிகவும் நச்சென்று இருக்கிறது...

 • A.Robet - chennai,இந்தியா

  விசாரணை விரைவாக நடந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தால் பழனிசாமிக்கு நன்மை இல்லை என்றால் வழக்கு சி.பி.ஐ . வசம் சென்றுவிடும் எல்லாம் அவன் செயல்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சர்வ சக்தி பெற்ற இரும்பு மனுஷி தங்கத்தாரகை என்றெல்லாம் ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப் பட்டவரையே A1 குற்றவாளி என்று நிரூபணம் செய்து பரப்பண அக்ரகாராவில் களி தின்ன வைத்தவர்கள் திமுக காரர்கள். திமுகவினரை ஊழல்வாதிகள் என்று ஓயாமல் பொய் பரப்பியவர் ஊர்ஜிதம் படுத்தப்பட்ட குற்றவாளி என்ற முத்திரையோட போய்ச்சேர்ந்தது எடுபிடிகளுக்கு மறந்திருக்காது. அதிகாரத்தில் இருக்கும் போதே குற்றம் செய்வோருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வல்லமை மிக்கவர்கள் திமுகவினர் என்பதை இவர்கள் மறந்து விட்டு பேசக் கூடாது.

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  தமிழக அரசில் டெண்டர் முறைகேடுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் மிக சிறப்பாக அரங்கேற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதை ஆதாரப்பூர்வமாக எந்த கொம்பனாலும் நிரூபிக்க முடியவே முடியாது. காரணாம் எல்லாம் வாய் மொழி உத்தரவுகளே. ஓர் திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு செய்யும் போதே தோராய மதிப்பீடை நிர்ணயம் செய்து விட்டுத்தான் மதிப்பீட்டை தயார் செய்வார்கள்.எந்த அதிகாரியும் தனக்கு கீழ் பணி புரியும் அதிகாரிகளை உண்மை நிலவரப்படி திட்ட மதிப்பீடு செய்ய அனுமதிப்பதில்லை. இந்த அதிகப்படியான மதிப்பீடுகள் பெரும்பாலும் மறைபொருள் வேலைகளில் மறைக்கப்படும். காரணம் இந்த வேலைகளை யாரும் தோண்டி பார்த்து தவறுகளை நிரூபிக்க முடியாது. அடுத்து டெண்டர் அறிக்கை வெளியிட்ட உடனே யாருக்கு டெண்டர் கொடுக்கவேண்டும் என்பதை முன் கூட்டியே முடிவு செய்து விட்டு டெண்டர் படிவங்கள் மேலதிகாரியை சந்தித்து தான் பெற முடியம். மற்ற போட்டியாளர்களுக்கு வாய் மொழி உத்தரவாக இது மேல் இடத்து உத்தரவு என்று கூறிவிடுவார்கள். அப்படி மீறி அவர் போராடி டெண்டர் படிவங்கள் வாங்கிவிட்டால் அந்த டெண்டரை காரண காரியம் இல்லாமல் அந்த அதிகாரி நிராகரித்து விடுவார். இது எல்லாம் சர்வ சாதாரணமாக நிர்வாகத்தில் நடக்கும் உண்மைகள். மேலும் அதையும் மீறி அவர் டெண்டரில் போட்டி போட்டு அந்த திட்டத்தை எடுத்துவிட்டால் அவரை வேலை செய்யவிடாமல் குற்றங்களை பெரிதுபடுத்தி ஒப்பந்தந்தை ரத்து செய்து அவரை வேறு திட்டங்களை செய்ய விடாமல் செய்து அவர்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கொண்டு செல்வார்கள்.இவை எல்லாம் எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும் சாட்சிகளை கொண்டுவரச்சொன்னால் எந்த சாட்சிகளை கொண்டு நிறுத்தமுடியும். இவர்கள் யாரும் தண்டிக்கப்பட போவதில்லை. இப்போது நடக்கும் முறைகேடுகளை தற்போது குற்றம் சொல்பவர்கள் கடைபிடிக்கவில்லை என்று எந்த கோவிலாவது சத்தியம் செய்வார்களா. ஆண்டவனுக்குத்தான் velicham

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  கை கட்டி சேவகம் செய்யும் துறை, எப்படி முதலாளிக்கு எதிராக வேலை செய்யும் நீதிபதிக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையை பாராட்டுகிறேன். நீதிபதி சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு இட வேண்டும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  எடப்பாடியும் அவரின் அமைச்சர்களும் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த நன்கொடை . ரசிகர் மன்றத்துக்காரங்களையெல்லாம் வெச்சு கட்சி ஆரம்பிச்சா இப்படித்தான் இருக்கும்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஏதோ ஜனநாயக நாட்டில் நீதிபதியாக இருப்பதை போன்ற எண்ணத்தில், பழனியின் மீது விசாரணை நடத்த ஹை கோர்ட் நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஒரு முதலாளியை வேலைக்காரன் விசாரணை செய்ய வேண்டும் என்பது போல் முதல்வரை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என்பது ஜோக். இப்போதே விசாரணையின் முடிவை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீதிபதி தமிழகத்தில் எந்த மூலையிலும் உள்ள ஒரு டீ கடைக்காரரை கேட்டாலும், மிக சரியாக சொல்வார். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement