Advertisement

50 ஆண்டுகளுக்கு பா.ஜ.,வை அசைக்க முடியாது: தமிழிசை

சென்னை: ''தாமிரபரணியில் புஷ் கரம் விழா நடக்க, பா.ஜ., முழு ஒத்துழைப்பு அளிக்கும்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.


சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, ௪௮ மாத, பா.ஜ., ஆட்சி, நாட்டை முன்னேற செய்திருக்கிறது. காங்கிரசார், பல தவறான புள்ளி விபரங் களை கொடுத்து, தொடர்ந்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள், அவர்கள் பக்கம் இல்லை என்பதை, அவர்கள் நடத்திய, 'பந்த்' தோல்வி காட்டுகிறது.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்கள் தற்போது, மக்களுடன் தான் கூட்டணி வைத்துஉள்ளோம்.

போராட்டம் ; இன்னும் ஆட்சிக்கே வராத ஸ்டாலின், முதலில், தன் கட்சியை காப்பாற்றட்டும். நாட்டில், 22மாநிலங்களில், ஆட்சியில் உள்ள, பா.ஜ.,வை, இன்னும்,50 ஆண்டுகளுக்கு, யாரும் அசைக்க முடியாது. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை குறித்த தெளிவான அறிக்கையை, மத்திய அரசு, இணையதளத்தில் வெளியிட்டுஉள்ளது. எந்த அரசிற்கும், மரங்களை வெட்டுவது நோக்கமல்ல. தமிழகத்தில், எந்த முன்னேற்ற மும் நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சிலர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி, தாமிரபரணியில், புஷ்கரம் விழா நடக்க, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஒத்துழைப்பு : இந்த விழா, ஹிந்து மதம் சார்ந்தது மட்டுமல்ல; நாட்டின் இயற்கை வழிபாட்டோடு சம்பந்தப்பட்டது. யார் தடுத்தாலும், தாமிரபரணியில் புஷ்கரம் விழா நடக்கும். அதற்கு, பா.ஜ., முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Sahayam - cHENNAI,இந்தியா

  நம்ம மாதிரி H ராஜா மாதிரி ஆட்களால் மட்டும் தான் மோடி அசைக்க படுவார்

 • Abdul rahim - Thanjavur,இந்தியா

  வருகிற தேர்தலில் அசைஞ்சுரும்

 • spr - chennai,இந்தியா

  இப்படி வெட்டியாகப் பேசிக்கொண்டிருப்பதனைவிட பாஜக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் என்ன அவை நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் என்ன இன்று எந்த நிலையில் இருக்கிறது இனி எப்படி செயல்படுத்தப்படும் என்று தோராயமாக அதன் பலன் கிடைக்கும் என்றெல்லாம் மக்களுக்கு விளக்கினால் வரும் தேர்தலில் தமிழக பாஜக டெபாசிட்டையாவது இழக்காமல் இருக்கும் தலைவி முயற்சி எடுப்பாரா வடநாட்டில் இருக்கும் ஒரு இளைஞரணித்த கலைவர் இணையத்தில் செய்துவரும் இந்த செயலைக்கூட இவரால் செய்ய முடியவில்லை

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பெட்ரோல் டீசல் காஸ் விலையை எதிர்த்து எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள் ... இப்ப ஒரு ஆர்ப்பாட்டம் செய்து விலையை குறைக்க உதவுங்கள் ..

 • NAVANEETHAM GOPALAKRISHNAN - Kolkata,இந்தியா

  அம்மாடியோவ் ஒரு மாணவியை சமாளிக்க முடியவில்லை.50 ஆண்டு சமாளிக்க முடியவேமுடியாது .அப்ப அப்ப நல்ல சிரிக்க வைக்கிறாங்க .

 • mindum vasantham - madurai,இந்தியா

  bjp ethirkka vendum endra sila matha veriyarkalum kollai வெறியர்கள் பிஜேபி என்றால் இணையத்தில் கதறுகியின்றனர்

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  அம்மா, தாயே ஒரு ஐந்து அடுக்கி உங்களுக்கு ஓட்டளித்த பாவத்திற்கு, 35 ரூபா க்கான பெட்ரோல் 85 இக்கு வாங்கி தண்டனை கட்டறோம்,

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  எம்மோய்....மொதோ நோட்டாவை அசைங்க....அப்பறம் பாப்போம்

 • Meenu - Chennai,இந்தியா

  ஏன் ஐம்பது ஆண்டுக்கு சமாளிக்கிற அளவுக்கு பொருளாதாரத்தை சேர்த்தாச்சா?

 • Anandan - chennai,இந்தியா

  ஆம், கவிழ்க்கத்தான் முடியும்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  ப்ரம்மசாரி ஓடம் கவிழ்த்த கதையை அம்மணி படிக்கல போல இருக்கு ..

 • Khalil - Chicago,யூ.எஸ்.ஏ

  சங்கர் சிமெண்ட் யூஸ் பண்ணீங்களா?

 • Karthik - Chennai,இந்தியா

  கொடி கம்பத்தில் நன்றாக கட்டிருந்தால் யாரும் 50 வருடம் அல்ல 100 ஆண்டுகள் கூட அசைக்க முடியாது. நாங்க ஒத்துகிறோம்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  திரு மோடிஜி யின் பேச்சுக்களை உடனுக்கு உடனே மொழிபெயர்த்து வெளியிடுங்கள். பாஜகவின் சாதனைகள் பட்டி-தொட்டிகளுக்கு சென்றடைய வில்லை. டுமீல் போராளிகளால் பாஜகவின் சாதனைகள் மக்களுக்கு தெரியவில்லை. செய்யவேண்டியது நிறைய உள்ளது. "Miles to go before you sleep"

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிஜேபி கட்சிக்கு தமிழிசை தான் தலைவர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement