Advertisement

பாக்., மீதான தாக்குதலில் நாயை விரட்ட சிறுத்தை சிறுநீர்

புதுடில்லி : பாக்., எல்லைப்பகுதியில் ஊடுருவி, பயங்கரவாதிகளுக்கு எதிராக, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லியத் தாக்குதல் நடத்திய நம் வீரர்கள், நாய்களை அருகில் நெருங்க விடாமல் தடுக்க, சிறுத்தையின் சிறுநீரை பயன்படுத்திய தகவல், தற்போது தெரியவந்துள்ளது.


கடந்த, 2016ல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள யூரி பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பாக்., எல்லைக்குள், நம் வீரர்கள் அதிரடியாக நுழைந்து, துல்லிய தாக்குதல் நடத்தி, எல்லையோரம் இருந்த பயங்கரவாதி களின் நிலைகளையும், முகாம்களையும் குண்டுகள் வீசி தகர்த்தெறிந்தனர். இந்த தாக்குதலில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


சாத்தியம் :துல்லிய தாக்குதல் நடத்துவதற்கான திட்ட தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல், ஆர்.ஆர்.நிம்போகர், நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 2016, செப்., 29ல், இந்திய ராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அடங்கிய குழுவினர், பாக்., எல்லைக்குள் ஊடுருவினர். எல்லையோரம் அமைந்திருந்த, நான்கு முகாம்களையும், நிலைகளையும், நம் வீரர்கள், சிறிது நேரத்தில் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தனர். பாக்., எல்லைக்குள் செல்லும்போது, அங்குள்ள கிராமங்களை சேர்ந்த நாய்கள் குரைத்து, நம் திட்டத்தை கெடுக்கும் சாத்தியம் இருந்தது.


ஓட்டம் :
இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால், சிறுத்தை சிறுநீரை நம் வீரர்கள் எடுத்து சென்றிருந்தனர். நாய்கள், சிறுத்தைகளை பார்த்தால், பயந்து ஒளிந்து கொள்ளக் கூடியவை. எனவே, சிறுத்தையின் சிறுநீரை நுகர்ந்த நாய்கள், இந்திய வீரர்கள் அருகே வராமல், ஓட்டம் பிடித்தன. இதனால், துல்லியத் தாக்குதலை, நம் வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்து, மீண்டும் நம் எல்லைக்குள் திரும்பினர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Sathiya Moorthy - Salem,சவுதி அரேபியா

  தினமலர்க்கு இதே வேலையா போச்சு. நாங்களே (சிறுபான்மையினர்) எதுவும் காரணமே இல்லாம மோடி யை திட்டி, கேலி செய்து, அவதூறு பரப்பி, நாட்டை கெடுத்தாலும் பரவாயில்லை என்று பாழாய்ப்போன காங்கிரஸ் மற்றும் இதர 'மதசார்பற்ற' கட்சிகளை ஆதரிச்சு தொலைக்கிறோம். அகில இந்தியா அளவுல மீடியால சப்போர்ட் கிடைக்காத மாதிரி நாங்களும் கதறிக்கிட்டு இருக்கோம். எங்களுக்கும் ஓய்வு வேண்டாமா? தினமலர்க்கு இரக்கமே இல்லியா? எங்களை கதறவிட்டு பார்ப்பதில் உங்களுக்கு என்ன ஆனந்தம்? இனிமேல் தயவுசெய்து மோடி அரசின் சாதனை எதையும் வெளியிட கூடாது என மன்றாடி கேட்டு கொள்கிறோம். காரணமே இல்லாமல் நங்கள் திட்ட திட்ட நீங்கள் அவரின் சாதனையை போட்டு எண்களின் வேதனையை மறைக்க சாதி செய்கிறீர்கள். எரிபொருள் விலையேற்றம், ராகுல் ஆன்மீக பயணம், இது போல செய்திகள் மட்டுமே எதிர்பார்க்கும் - மோடியின் எதிர்ப்பாளர்கள் (மதசார்பற்ற சிறுபான்மையினர்)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏம்ப்பா/..... இதுக்காக சிறுத்தைகளை வளர்க்கிறீங்களாப்பா.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மாட்டின் கோமியம் மாதிரி சிறுத்தையின் கோமியமும் உபயோகமாக உள்ளது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சிறுநீர் ஸ்பெசிலிஸ்ட்கள் நாய்களா...

 • chaiwala -

  for bjp govt cow urine,and for army cheetha urine,all depend about urine,shame on this govt in the world,

 • chaiwala -

  ok

 • ஆப்பு -

  இது ஒண்ணும் புதுசு இல்லை.... நரியின் சிறுநீர் அமெரிக்காவில் விற்கப் படுகிறது. வயலில் தெளித்தால் முயல்கள் வராது ஓடிவிடும்.

 • Balakrishnan S - Trichy,இந்தியா

  அருமை...அதுசரி, சிறுத்தையின் சிறுநீரை எப்படிப் பிடித்தார்கள்..?

 • Muruga Vel - Chennai,இந்தியா

  கேஷ்மீரில் பெரும்பாலும் தினசரி குளிக்கும் பழக்கம் கிடையாது … தண்ணீரை சூடாக்க செலவு அதிகம் மற்றும் மின்சார பற்றாக்குறை … துணி மணிகளையும் தோய்த்து உடுத்தும் வழக்கம் குறைவு …. அதையே சகித்துக்கொண்டு வாழும் நாய்களுக்கு சிறுத்தை சிறுநீர் என்ன பண்ண முடியும் … பங்களாக்களில் நுழையும் திருடர்கள் மயக்க மருந்து தடவிய பிஸ்கட்டுகளை நாய்களுக்கு கொடுப்பதுண்டு ...

 • ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ

  சீமான் இதை படித்தால் தன் அடுத்த பிரபாகரன் சந்திப்பு கதையில் சேர்த்துக் கொள்வார்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இதை விட பன்றிகளை தூக்கி தீவிரவாதிகள் மீது வீசினால் போதும் 72 கன்னிமார்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற விரக்தியில் ஓடிவிடுவார்கள்... கலவரம் செய்யும் இடத்தில பன்றிகளை நிறுத்தி இஸ்ரேல் ராணுவம் இவர்களை கட்டுப்படுத்துகிறது...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சிறு துரும்பும் பல் குத்த உதவும் சிறுத்தையின் சிறு நீரும் பக்கிகளை வெல்லும் . சில் வண்டு சிக்கும் சிறுத்தை நீர் சிக்காது .

 • Remedios Villavarayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்போ சொல்லிடீங்களே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement