Advertisement

ஜெ., மரண விசாரணை: ரிச்சர்டு பீலேவிடம் விசாரிக்க முடிவு

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் டாக்டர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது. டாக்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது. ஜெ., மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிஷனின் விசாரணை காலம் அக்டோபர் 24ல் முடிகிறது. அதற்கு முன்னதாக அனைத்து அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • S.prakash - Palakkarai,இந்தியா

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் தொகை வீண்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கமிஷனின் விசாரணை காலம் அக்டோபர் 24ல் முடிகிறது. கவலை படாதீர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கமிஷன் ஆயுள்காலத்தை நீட்டிப்போம்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நன்றாக பீலா விடப்போகிறார்கள் சாக்கிரதை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement