Advertisement

மல்லையாவை சந்தித்தேனா? ஜெட்லி மறுப்பு

புதுடில்லி : லண்டன் செல்வதற்கு முன் தன்னை சந்தித்ததாக மல்லையா கூறியதை அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.


இதுகுறித்து அமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கை: என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்ததால், பார்லியில் அவரை சந்தித்ததுண்டு.


பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பார்லி., வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். ராஜ்யசபா எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • Viswanathan - karaikudi,இந்தியா

  இவன் ரொம்ப நல்லவன்டா

 • kulandhaiKannan -

  Government should not react to Mallya. He is trying to provoke a strong reaction from Indian government after which he can tell UK court that he will not be safe in India and request court permission to stay back in UK indefinitely. After all, Mallya is a clever businessmen turned politician

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அடமானம்வைக்க வேறு சொத்து பாக்கியில்லாததால் கிங் பிஷர் பிராண்டு பெயரை வைத்து 500  கோடி கடன்கேட்டபோது ஸ்டேட்வங்கி மறுத்தது..ஆனால் வேட்டி கட்டிய தமிழ் பொருளாதார புலி அழுத்தம்கொடுத்து கடன் கொடுக்கவைத்தார். (எத்தனை பெட்டி கைமாறியது?). இதுபோன்றவற்றை தான் எதிர்த்ததாக ரகுராம்ராஜன் நேற்று திடீரென   கூறுகிறார்.ஆனாலும்  இப்போது கேடுகட்டவர்கள் காங்கிரசை நேர்மையானதாகக்  காட்ட பெரும் முயற்சி செய்கிறார்கள். அதேநேரத்தில் மால்யாவைவிட பன்மடங்கு கிரானைட்  மணல் தாதுமணலில்  கொள்ளையடித்த திராவிஷர்களைப் பற்றி அவர்கள் வாயே திறக்கமாட்டார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ராஜ்யசபா மைய்ய மண்டபத்தில் எந்த எம்பியும் சர்வசாதாரணமாக பலர் முன்னிலையில் மந்திரிகளை சந்திக்கலாம். அப்போது தனது கம்பெனிகளை காப்பாற்றக் கோரினார். ஜெட்லீ உதவ மறுத்ததால் நேரடியாக விமான நிலையம் சென்று தப்பித்தார் விஜய் மால்யா. கோர்ட்டும் அப்பயணத்தை நிறுத்த மறுத்தது.இதுதான் நடந்தது.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ஏனுங்க ஜெட்லி... சம்பிரதாயப்படி இந்த மேட்டர்ல விவசாயம் அல்லது மனிதவள மேம்பாட்டு அமிச்சருங்க தானே பதில் சொல்லனும்...??? திருந்திட்டீங்களா....???

 • sampath, k - HOSUR,இந்தியா

  whatever it may be, but public fund gone

 • ஆப்பு -

  ரெண்டு பேரையும் நம்ப முடியாது...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இவங்கப்பன் குதிருக்குள் இல்லையாம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement