Advertisement

ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் நமது பலம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்

டில்லியில் விமானப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில், தனோவா பேசியதாவது: உலகில் வேறெந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு நமக்கு, இரண்டு அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அணு ஆயுதம் உள்ள சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, நம் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நம் விமானப் படைக்கு, தலா, 16 - 18 போர் விமானங்கள் உடைய, 'ஸ்குவாட்ரன்' எனப்படும், படைப் பிரிவுகள், 42 தேவை. ஆனால் தற்போது, 31 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளன. இந்தப் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும், படையை வலிமைபடுத்தவும், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களும், ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன. இதற்கு முன்னும், இவ்வாறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • A.Robet - chennai,இந்தியா

  கிறிஸ்துவ வேதாகமத்தின் படி ரபேல் என்றால் குணமளிக்கும் கடவுளின் தூதர் நமது நாட்டுக்கு தேவை தான் அதன் விலை என்ன என்பதுதான் கேள்வி அதை மத்திய அரசு வெளிப்படையாக சொல்லிவிட்டால் போதும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா,,அனால் இதுவரை நிரூபணம் ஆகவில்லையே... நாம் எங்கெங்கே உபயோகித்தோம்...

 • VOICE - CHENNAI,இந்தியா

  Rafel விமானப்படைக்கு தேவை தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சிரியா ISS போரின் போது அதன் முழு பலம் காணமுடிந்தது. ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அதை வைத்து கமிசன் அடித்தல் நாட்டின் சாபக்கேடு. இந்தியாவுன் மிக முக்கிய சாபக்கேடு லஞ்சம் அது ஒழியாதவரை இந்திய வளர வாய்ப்பு இல்லை, மீடியாவில் வெறுமென சொல்லிகொள்ளலாம் வளருகிறது என்று.

 • Ivan -

  Aman Aman Ambani Tata nu Indians ta koduka koodathu money earn panniduvanga, China ta kodukalama?

 • MurugeshsivanBjpOddanchatram -

  முக்கண் மைந்தா நீயெல்லாம் இந்தியன் தானா?

 • MurugeshsivanBjpOddanchatram -

  பாதுகாப்பு விசயத்தில் அரசியல் செய்கிறார் ராகுல்...காரணம் சீன விசுவாசம்.

 • kmathivanan - Trichy ,இந்தியா

  If we involve HAL we get the plane in next century . The way the public sector working efficiently everybody knows. The examples are loss making Indian airlines . Communists & Congo’s and green pakis want to weaken India against China and Pakistan respectively . Also the contract is chosen by Rafiles to make it efficiently. If you have evidence go to court. Thieves always think about robbing not other things. Congress is crying because this was a great chance missed like bodies with middle men. Ambanis are new but efficiently using resources to make fast and efficient. This is evident in phone charges come down drastically. So greens and traitors got more time in this forum to spew the venom about Modi.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  நம் ராணுவத்திற்கு பலன் சேர்க்கும் சரி இந்த வரவு செலவு ஏன் HAL இடம் கொடுக்காமல் 30000 கோடி கடன் உள்ள அம்பானி சகோதரருக்கு ஏன் கொடுக்கணும் அந்த ஆள் சின்ன பொம்மை பிளாஸ்டிக் விமானம் கூட செய்ததில்லை பின்னர் எப்படி அவருக்கு கொடுக்கப்பட்டது உம்மை பேச்சை திசை திருப்ப இந்த மாதிரி பேட்டி கொடுக்க சொன்னார்களா

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Rafale ல இப்பொம் வாங்கப்போறவனுவ பணபலம் நல்லா அதிகரிக்கப்போவுதுன்னு சொல்லுங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement