Advertisement

பலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன்

திருவனந்தபுரம்: பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

போராட்டம்கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க வலியுறுத்தி, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடிதம்பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


லஞ்ச புகார்கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறுகையில், பேராயர் முல்லக்கல், மற்றும் இரண்டு பேர் எனது நண்பரை அணுகி, பலாத்கார புகாரை திரும்ப பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருகிறோம் என தெரிவித்தனர் என்றார்.


ஒரு வாரம் அவகாசம்பலாத்கார வழக்கு நாளை(செப்.,13) கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து, இன்று(செப்.,12) போலீசாரின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. வரும் 19ம் தேதி ஆஜராகும்படி பேராயருக்கு சம்மன் அனுப்புவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது.


அறிக்கை:கடந்த மாதம் போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014 மே முதல் 2016 செப்., வரை பேராயர் தனது பதவியை பயன்படுத்தி பல முறை கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர்.
கடந்த மாதம் ஜலந்தர் சென்று பேராயரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் தெரிவித்த தேதிக்கும், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தனர்.


மறுப்புபேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், கன்னியாஸ்திரி பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளார். தனது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இது குறித்து பேராயர் விசாரணை நடத்தியதால் அவர் புகார் கூறியுள்ளார். கன்னியாஸ்திரி குறிப்பிட்ட தேதியில், பேராயர் குருவிலாங்காடு பகுதியில் தான் தங்கியிருந்தார். முதல்முறை பலாத்காரம் செய்யப்பட்ட பின் ஏன் அவர் புகார் கூறவில்லை. தேவாலயத்திற்கு எதிராக சதி செய்பவர்கள், கன்னியாஸ்திரிகளை தூண்டிவிட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பின்னணியில் பலர் உள்ளதாக கூறியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்த கேஸு கடைசியில் புஸ்ஸுன்னுதான் போகும்... Church is very powerful ... கன்னிகாஸ்திரீகள் தாய் மதம் திரும்புவது நல்லது... அவர்களுக்கு அங்கு நியாயம் கிடைக்காது...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Prima facie evidence (முகாந்திரம்) இருந்தா சட்டுபுட்டுனு charge sheet ட்ட file பண்ணி சாரணைய ஆரமிங்கப்பா... எதுக்கு இவ்ளோ இழுத்தடிக்கறீங்க...?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பாதிரியார்கள் பணி பிற மதத்தினர்களை காசுகொடுத்தல், கவர்தல், கற்பழித்தல், காணாமல் செய்தல், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த பெருமளவு பணம் இந்த பாவாடைகள் மூலமாக வந்து கொண்டு இருந்தது இப்போது தடை செய்யப்பட்டதால் கூவுறானுக பாருங்க சத்தம் காதை பொளக்குது ஆனாலும் மோடி ஒழிக கோசம் வருதே

 • JosephvijayCoimbatore -

  கிறிஸ்தவர்கள் ஊர் பூராவும் இதே வேலையைத் தான் செய்கிறார்கள். ரெகுலராக சர்ச்சுக்கு வரும் பெண்களை அதுவும் கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை தெரிந்து கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றனர்.

 • ஆப்பு -

  நம்ம ஊர் சட்டம் நீதி மேல் நம்பிக்கை போய்விட்டது... எனவே நேரா வாடிகன் கிட்டே முறையீடு.

 • Prabu Ganapathy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ரொம்ப கஷ்டம்

 • Prabu Ganapathy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  very bad

 • ArulKrish -

  manmadha leelayai vendrar Undo?

 • kalyanasundaram - ottawa,கனடா

  அவர்களும் உணர்ச்சி உடையவர் தான் எந்த பெண்ணிற்கும் உடல் உறவு இன்பந்தான் இது இயற்கைதான் . எப்படியும் கடவுள் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவர்களிடம் மிகவும் உண்டு

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஆ ஊ னா ட்ரெண்டிங்ல உடுறோம் உடுறோம் ன்னு கூவுற மடயனுக இப்போ விடுங்கடா ட்ரெண்டிங்ல. உடு. உலக ட்ரெண்டிங்ல உடு, உட்டு பாரு... டேய் உங்க ட்ரெண்டிங் எல்லாம் பி.ஜே.பி யை பார்த்தா மட்டும் தாண்டா. இவனுக யாரும் நியாத்தை பேச வரவனுக இல்லை. அந்த நியூஸ்ல பி.ஜே.பி இருந்தா உலகமே தீ புடிச்ச மாறி ஏத்தி விட்டு ட்ரெண்டிங் ஆகுறோம்பானுக. பி.ஜே.பி இல்லேன்னா அவன் அவன் மூடிட்டு போயி அவன் அவன் வேலையை பார்ப்பானுக. இப்போவாது கொஞ்சம் கொஞ்சமா மக்கள் புரிஞ்சுக்கோங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ வந்து இந்த ஆமைக்கறி பய, பாரதிராஜா பொங்கணும், கிஸ்னாயில் ஊத்தி கொழுத்திகிட்டு உசிரே குடுக்கணும். சும்மா டி.வி ல வேணும்னே போட்டு போட்டு வெறி ஏத்தி கிட்டே இருக்கணும். ஏன் அமைதியா இருக்கானுங்க? இப்போ ஏன் காட்டு எருமை மாறி கத்த மாட்டேங்கிறானுக?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நேற்று ஒரு கன்னியாஸ்திரி கேரளாவில் கிணற்றில் இறந்து கிடந்தார். இதை ஏன் ஊதி ஊதி பெரிதாக்காமல் கமுக்கமா அமுக்கிட்டாய்ங்க? கற்பழிச்சு செத்தா ஏதோ ஒரு வகைல பா.ஜ.க, அல்லது மோடி பேரு வருகிற மாறி செய்தி போட்டால் தான் ஊரெல்லாம் டி.வி ல போட்டு கிழிப்பாங்க போல.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பெரியாரும் இந்த பேராயரும் ஒன்னு ... இதை அறியாதவங்க வாயில மண்ணு ...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கன்னியாஸ்திரிகள் இரவு நேர பிரார்த்தனை என்ற பெயரில் நடு இரவில் தேவாலயம் வர அனுமதிக்கப்பட்டனர். எதற்காக தமிழக ஊழல் கட்சி தொடர்ந்து பாதிரியார்களுக்கு ஆதரவாக உள்ளது?

 • San - Madurai ,இந்தியா

  Why no news in sun tv

 • Arasu - Ballary,இந்தியா

  பலாத்கார புகழ் என்று தலைப்பு இருந்திருக்கவேண்டும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பேராயர் பிராங்கோ, பிராங்கா உண்மையை சொன்னா போலீஸாரிடம் இருந்து தப்பிக்கலாம்

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குற்றம் செய்த இந்து சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் குற்றம் செய்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்கவே முடியாது. கிறிஸ்தவ மதத்தில் பிஷப் என்பவர் சர்வ வல்லமை பொருந்தியவராக கருதப்படுகிறார்...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பாவம். புராடஸ்டண்ட் பாதிரிகள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறார்கள் . பாவமன்னிப்பு அதிகாரமும் இல்லை. ஈவாங்கலிஸ்ட் வியாபாரமும் அதில் நடப்பவையும் வேறு கதை.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இவனை மட்டும் குறை கூறி என்ன பயன் சில வக்கிரறர்கள் எல்லா இதிலும் இருக்கிறார்கள்....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பெண் போலீஸ் தான் விசாரணை செய்யவேண்டும் என்பாரோ? பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் அதுவரை ஜாலி 

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  திருமுருகன் காந்தி என்றவன் எப்ப பார்த்தாலும் ஹிந்துக்களை பற்றி கண்ணா பின்னாவென்று உளறி கத்தி கொண்டிருப்பனே எங்கே அவன் ?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  As soon as this incident came to the light this man told as due to the transfer of the nun she made this allegations and now this lier is telling as due to his enquiry about the nun's involvement in some other illegal affairs with one man was clearly indicates he is a lier and unfit to hold the post of bishop in this religion of Roman Catholic faith. Since this man is in possession of heavy wealth of the Catholic faith tried to bribe the poor nun through some of his trusted priest was also published in the news. This unholy man is like a wolf covered his whole body with sheep skin and making the Catholic faith and the society fools by his false and unholy speeches. He should be tried like a ordinary man by without giving any value or respect for his present post and position under close confinement and also not granting any Bail till the case is over.If this man is granted bail he may destroy the evidence by using his post and power.As soon as this man is charge sheeted or filed FIR he should be removed or dismissed from the present post for fair trail of the case.The God was seen all the sins and is hearing all the lies of this man and He will award him appropriate punishments very soon during his life time itself."Dheivam Nindru Kollum " will be proved in this case very soon in coming days.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  \\கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்//..... புகார் தெரிவித்த பெண்ணின் நிலை என்னவானது?..... இவங்க சாமி கும்புட போறாங்களா இல்ல நாட்டாமக்கிட்ட பிராது கொடுக்க போறாங்களா?....

 • HSR - Chennai,இந்தியா

  பேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், /// இவரு எத்தனை பேரை???.ஹிந்து போலி சாமியாருங்கள்ளாம் இவனுங்க கிட்ட நெறய கத்துக்கணும்..எனக்கு ஒரு ஆடியோ கிடைத்தது..அந்த பாதிரி ஒரு நல்ல குடும்ப பெண்ணை புருஷனுக்கு தெரியாம சர்ச்சுக்கு வர சொல்றது என்ன? அந்த பொண்ணு ரொம்ப தூரம் ஃபாதர் அப்படீங்குது..இவன் அதுக்கென்ன இங்க இருக்குற வீட்ட உனக்கே குிடுக்குரேங்குறான் ... ஹாஹாஹா..போங்க போயி உங்க பொண்டாட்டி புள்ளைங்கள இந்தப்பாவிங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க..முடிஞ்சா சர்ச்சுக்கு போகாம வீட்லயே கும்புடுங்க

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பேராயர் இனி திருமணம் செய்து கொள்ளுங்கள் , ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுங்கள்.

 • nandaindia - Vadodara,இந்தியா

  கருமம். தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளி வரும் போலிருக்கிறதே. இவன் பேராயரா பேய்ராயரா?

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  பேராயர் கன்யாஸ்திரிகளை பார்த்தால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement