Advertisement

மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்

புதுடில்லி: தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு தான் அவதியாக உள்ளது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டில் ரூ.22,700 கோடி வரி வருவாய் தரும் அளவுக்கு மாநில அரசுகளுக்கு அட்சய பாத்திரமாக உள்ளது.

ஆய்வு அறிக்கை சொல்வது என்னஎஸ்.பி.ஐ.,யின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73ஐ எட்டும் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி ரூ.22,700 கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் உயர்கிறது என்றால், முக்கியமான 19 மாநில அரசுகளுக்கு ரூ.1,513 கோடி வருவாய் கிடைக்கும்.

முதல் இடத்தில் மகாராஷ்டிராகூடுதல் வருவாய் பெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநில அரசுக்கு ரூ.3,389 கோடி ரூபாய் கிடைக்கும். அடுத்தாக, குஜராத் மாநிலத்திற்கு ரூ.2,842 கோடி கிடைக்கும். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு, ஒரு லிட்டருக்கு 39.12 சதவீத வாட் விதிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக குஜராத் மாநிலத்தில், ஒரு லிட்டருக்கு 16.66 சதவீத வாட் விதிக்கப்படுகிறது.

குறைத்தாலும் பாதிப்பு இல்லைமகாராஷ்டிரா, ம.பி., பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளது. அம்மாநிலங்களில் பெட்ரோல் விலையில், ரூ.3, டீசல் விலையில், ரூ.2.50 குறைக்க முடியும். மாநில அரசுகள் கச்சா எண்ணெய் விலை, போக்குவரத்து செலவு மற்றும் கமிஷன் ஆகியவை மட்டும் அடங்கிய அடிப்படை விலை மீது வாட் விதித்தால், லிட்டருக்கு டீசல் விலையில் ரூ.3.75, பெட்ரோல் விலையில், ரூ.5.75 குறையும். ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • Ivan -

  He he vanthutanunga en bathroom adachitu central govt mathu nu solla.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மக்கள் கிட்டேருந்து கழுத்தை நெறிச்சி பிடுங்கி என்ன செய்ய போறாங்க? மக்களுக்கு நல திட்டங்கள் செய்யப் போறோம்.. ஓஹோ.. அப்ப பிடுங்காமல் இருந்தாலே அவங்களுக்கு நல்லது தானே? நீங்க திட்டங்கன்னு சொல்லி திட்டம் போட்டு திருட பணம் வேணும். அதுக்கு அடிக்கிற சுரண்டல் கொள்ளை தாண்டா இது.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  மத்திய அரசின் வருவாய் எவ்வளவு..அதையும் சொல்ல வேண்டாமா..20 மாநிலங்களில் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே மக்களுக்கு நாக்கு தள்ளுகிறது..இன்னும் மொத்தமும் இவர்கள் வந்து விட்டால்..சங்குதான்..

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  go for free energy.

 • mohan - coimbatore

  தப்பா ஓட்டு போட்டதுக்கு தண்டனை

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மாநில அரசிற்கும் மத்திய அரசிற்கும் அநேகமாக சமமாக தான் பெட்ரோல் வரி போகிறது. என்னமோ மாநிலத்திற்கு தான் அதிக வரி கிடைக்கிறது என்பதை போன்று ஒரு பிரமையை ஏற்படுத்துவது தவறு. பல தவறான வாட்ஸ் அப் செய்திகள் உலா வருகின்றன.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "(இப்பம்) மத்தியில ஆளரவனுங்களுக்கு அட்சய பாத்ரம்" அப்டீன்னு போடுங்க...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அட்ஷய பாத்திரம் துரியோதனினிடம்( கௌரவர்களிடம்) இருந்து பயன் என்ன

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வசதியாக ஒன்றை பலர் மறந்து விடுகிறார்கள். இப்போதைய 5 .30PM மணி செய்திப்படி உற்பத்தி அதிகரிப்பால் பணவீக்கமும் விலைவாசி குறியீடும் பத்துமாதங்களில்  இல்லாத அளவுக்கு 3 .69 &ஆகக்  குறைந்து விட்டன. பெட்ரோல் டீசல் விலை இதனை துளியும் பாதிக்கவில்லையே.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எத்தனை சதவிகிதம் வரி என்றாலும் அதை GST வரம்புக்குள் கொண்டு வாருங்கள் . இல்லை என்றால் சிக்கல் தான்.

 • srikanth - coimbatore,இந்தியா

  மோடி தான் PM ஆ வந்தா இந்தியா வோட GDP உயரும் சொன்னதை நம்பி 2014 ல வோட்டை போட்டோம் . ஆனா இப்ப தான் தெரியுது அவரு சொன்ன GDP Gross Domestic Product இல்ல G - Gas , D - Diesel , P- Petrol . இன்னாம்மா GDP யா சொன்ன மாதிரி உயர்த்திட்டாரு. நாம தான் அவுரு சொன்னதை பெரிய புரிஞ்சுக்கல பிஜேபி ஆளுற மாநிலங்க ( 20 + ஸ்டேட்ஸ் ) பெட்ரோல் tax குறைச்சாங்கன்னா , மிச்சம் மிதி இருக்குற மாநிலங்களும் குறைக்கமாட்டாங்களா . பிஜேபி கு வோட்டை போட்டதுக்கு இவளவு பெரிய தண்டனை தேவையா ?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "Ennoruvar Vedhanai Evargalukku Vedikkai Idhayamatra Manidharukku Edhuvellam Vaddikkai"Pole the states are happy and going to enjoy the Akshaya Paththiram in coming days.Where as the people of our country are going enjoy with their Komanams and Thiruvoodugal in coming days if the present economic condition of our country continuous further.

 • srikanth - coimbatore,இந்தியா

  நாடு முழக்க எங்க ஆட்சி தான் இன்னு பீதி கிட்டு இருக்கறவங்க உண்மையிலே மக்கள் கஷ்டத்தை பத்தி கவலை பட்டாங்கன்னா பெட்ரோல் வரியை குறைப்பாங்க . 2 G scam , common வெல்த் games ஊழல் இதுல அப்பாவி மக்கள் கிட்டயிருந்து காசு புடுங்கலை. இந்த பெட்ரோல் tax தான் அநியாயத்துக்கு மக்கள் கிட்ட இருந்து வாங்கறாங்க .

 • suraGopalan -

  அதான பாத்தேன் Modiயா கொக்கா... இப்ப சொல்லுங்க வாசகர்களே BJP தான் கிங் என்று.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எண்ணெய் இறக்குமதி பாஜக ஆட்சி நான்காண்டுகளில் 189 லிருந்து 217 மில்லியன் மெட்ரிக் டன்னாகிவிட்டது வளர்ச்சியில்லாமல் 15% இது சாத்தியமில்லை இவ்வளவு இறக்குமதி அதிகமானால் நிதிப்பற்றாக்குறையிலும் அந்நிய செலாவணி மதிப்பு குறைவிலும்தான் முடியும் கச்சா என்னை இறக்குமதி செலவும் அதிகமாகும் . பெட்ரோல் வரி மக்களை பாதிக்குமென்றால் தனியார் வண்டிகளுக்கு ஆண்டுக்கான சாலைவரியையும் புது வண்டிகளுக்கான ஜி எஸ் டியையும் இரண்டு மூன்று மடங்கு ஏற்றலாம் அந்தப்பணத்தில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தலாம்( இங்கு ஒரு செய்தி சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு யாரும் கடன் கொடுக்க மறுக்கிறார்களாம் . ஏற்கனவே கடும் நஷ்டமென்பதால் ) .தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்தவிர்த்து மற்றவர்கள் வரியைக்குறைக்கவே மாட்டார்கள் கர்நாடகாவுக்கு கேரளாவும் சமீபத்தில்தான் வரியை ஏற்றியுள்ளார்கள் அவர்களை யாரவது குற்றம் சொல்கிறார்களா? இத்தாலியும் சீனாவும் கோபித்துக்கொள்ளுமே

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தமிழகம் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம் கோடிகள் gst வரி மத்திய அரசுக்கு கொடுக்கிறது . அதை நிறுத்தினால் சரியாகும்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வரி மேல் வரி விதிப்பதை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும். மக்களுக்கு விஷயம் தெரியாது என்று மாநில அரசுகள் நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றன.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  குஜராத்தை விட தமிழகத்தை திராவிட கட்சிகள் சொர்க்கமாக மாற்றி இருக்கிறது என்று சொன்னவர்கள் இன்று அதிகம் வாட் வரி கட்ட புலம்புவதேன். குஜராத் 16 % வாட் வரி வசூலிக்கிறது தமிழகம் 34 % , அது மேலும் 50 % ஆக உயர்ந்தாலும் வரி கட்டுங்கள். புலம்பல் ஏன்.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  இதெப்படி வருவாய் இழப்பு என்றாகும்? படஜெட் போடும்போது 60 ரூபாய் அளவில் என்ன வரிவருவாய் கிடைக்குமோ அதைவைத்துதானே மற்ற செலவுகளை கணக்கிட்டு போட்டனர், இப்போது கிடைப்பது உபரி வருவாய்தான், அதை இழப்பென்று மாநிலஅரசுகள் அறிவிப்பது மக்கள்விரோத செயல்தான். எப்படி டீலர் கமிஷன் ரூபாய்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று மத்திய மாநில அரசுகளும் உச்சபட்சமாக லிட்டருக்கு வரியாக ரூ.10/- என்றுதான் நிர்ணயித்து கொள்ளவேண்டும். அதைச்செய்தால் உண்மையில் தொழிலும் வளரும், மக்களும், நாடுமே பயனடையும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தமிழக மாநில அரசு பெட்ரோல் /டீசல் , டாஸ்மாக் சாராயம் மற்றும் சிகரெட் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் வரையில்தான் இயங்குகிறது. அவர்களின் கட்சி வியாபாரியிடம் வரி வசூலிக்க மாட்டார்கள் , இயற்கை வளங்களை (மணல் , கிரானைட் ) போன்றவற்றை அவர்களே சுருட்டிக்கொள்வார்கள்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மாநில அரசுகள் தங்கள் வருவாயில், 70 % மேல் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு தான் செலவழிக்கிறது......ஆக நாம் கட்டும் வரியில் வாழ்ந்துகொண்டு,,,லஞ்சமும் பெற்று கொண்டு தான் உங்களுக்கு அரசு ஊழியர்கள் சேவை செய்கிறார்கள் என்ற உண்மை என்னைக்கு புரியுமோ அன்று தான் லஞ்சம் கொடுப்பவர்கள் நிப்பாட்டுவார்கள் .

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  எல்லா பெட்ரோல் பங்க் களிலும் இப்பிடி போர்டு வைக்க சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.... மூல பொருள்:34.00 மத்தியஅரசு வரி:13.00 மாநில அரசு வரி:30.00 டீலர் கமிஷன்: 6.00 மொத்தம் ருபாய் ___ (ஒரு லிட்டர்):83.00..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement